ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு

30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது.

இதற்கமைய, புதிய விலை 400 ரூபாய் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதேபோன்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையினை 30 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதேவெளை, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த பொருட்களின் விலை குறைப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ஆயிரத்து 675 ரூபாய்க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 165 ரூபாய்க்கும், உள்நாட்டு சிவப்பரிசி 169 ரூபாய்க்கும், கோதுமை மா 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, பெற்றோல் விலையைத் திடீரென அதிகரித்ததன் உள்நோக்கம் என்ன என்று எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மீண்டும் எரிபொருள் வரிசையை ஏற்படுத்த அரசு முயற்சிக்கின்றதா என்றும் எதிரணிகள் வினாத் தொடுத்துள்ளன.

இதனூடாகத் தேர்தலை ஒத்திவைக்க அரசு சதி செய்கின்றதா என்றும் எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

இதன்படி, லங்காபெற்றோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய விலை 400 ரூபாவாகும்.

எனினும், ஏனைய ரக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இதனிடையே, சிபெட்கோ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்துக்கு அமைவாக பெற்றோல் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி