ஈழ சினிமா இயக்குநர் மதிசுதாவின் இயக்கத்தில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது மக்களின்

வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் உருவாகிய 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேவேளை குறித்த திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகி வரும் நிலையில் குறித்த திரைப்படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் குறித்த திரையரங்குகளுக்கு அறிவித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான அடுத்தகட்ட நகர்வுகளில் திரைப்பட குழுவினர் தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த திரைப்படம் திரையிடப்படாமல் போனால் நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை மீள வழங்குவோம் என இயக்குநர் மதிசுதா அறிவித்துள்ளார்.

இயக்குநர் உரிய அனுமதிகளை பெற்று கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்த படத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் உருவாக்கியிருந்தும் இறுதி நேரத்தில் இவ்வாறு தடை ஏற்பட்டுள்ளமை ஈழ கலைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த திரைப்படமானது திரையரங்குகளில் திரையிட தடைவிதிக்கப்பட்டதற்கு எதிராக பலரும் தமது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VTK01.jpg

VTK03.jpg

VTK02.jpg

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி