உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை என காணாமல்

ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காக்க கோரியும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர்ச்சியான போராட்டத்தின் 2156 நாளாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இவ்வாறு தெரிவித்தனர்.

பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கல் வேண்டும் வேண்டும் என தெரிவித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்தும் அங்கு கருத்து தெரிவித்த கோ.ராஜ்குமார், “இரண்டு முக்கிய இராணுவ மேஜர்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் பயணத் தடையுடன் வேறு பல நிபந்தனைகளை விதித்தது. சுமார் 2 வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் முன்னாள் இரண்டு ஜனாதிபதிகளுக்கு கனடா தடை விதித்தது.

இந்த இரண்டு ஜனாதிபதிகளுடன் தொடர்புள்ள எந்தவொரு கனேடியர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவையெல்லாம் நம் மக்களுக்கு என்ன சொல்கின்றன?
உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை.

எமது தாய்மார்களுடன் இணைந்து தமிழ் இறையாண்மைக்காக யாரேனும் ஒருங்கிணைத்து குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இறையாண்மை என்பது ஒரு கெட்ட வார்த்தை அல்ல, அது ஒரு நட்பான எளிமையான சுதந்திர வார்த்தை.

குறிப்பாக அமெரிக்காவுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை வலியுறுத்துமாறு எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்துகிறோம்.கொழும்பைக் கண்டு பயந்தால் அமெரிக்காவிடம் பேசுங்கள்.

சீன ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்கத் தலைமையுடன் இந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்கும் நாடுகள் “குக்” தீவுகளுக்கு இறையாண்மையை வழங்கின.இங்கும் இறையாண்மைக்கான வலுவான சாத்தியம் உள்ளது” என தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி