தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மூன்று ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்

செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா  வரும் நாட்களில் ஈடுபடக் கூடும் என உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

விஷேடமாக கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளைத் தேடும் “மோசமான ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் 2015 - 2018 ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் ஜனாதிபதியின் கைகளில் உள்ளது.

தான் நாட்டின் ஜனாதிபதியாகவும், பொலிஸ் மற்றும் இராணுவத்திற்குப் பொறுப்பான அமைச்சராக ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாகச் செயற்படுவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.  இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைவடையும் வரைக்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைமைப் பதவியை அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவிடம் ஒப்படைத்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்று (18) இடம்பெறவுள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரியவருகின்றது.

(ராவய)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி