ஒரு காலத்தில் இந்த நாட்டில் எங்களுடைய மக்களை நாடற்றவர்கள் என்றும் கள்ளத்தோணி என்றும் இங்கிருந்த மக்கள் அழைத்தார்கள். ஆனால் இந்த பெருந்தோட்ட

மக்களும் எங்களுடைய நாட்டு மக்களே அவர்கள் இந்த நாட்டுக்காக உடழத்தவர்கள் அவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க வேண்டியது இந்த அரசாங்கத்தினுடைய பொறுப்பு இதனை நாங்கள் வழங்க வேண்டும் என்று கூறி அதனை செய்து காட்டிய சாதனை தலைவன் என்றால் அது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச என்று கூறவேண்டும்.

அன்று அவர் அதனை செய்யாவிட்டால் இன்று இந்த நாட்டில் நாங்கள் தலை நிமிர்ந்து வாழ முடியாது எங்களுடைய உரிமைகளையும் பெற்றுக் கொண்டிருக்கமுடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் ஒன்றாய் முன்னோக்கிச் செல்வோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ராகலையில் இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணியும் மலையகத் தொழிலாளர் முன்னணியும் மேற் கொண்டிருந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் அமைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த ராகலை உடபுஸ்ஸல்லhவ பகுதியில் இருந்து வருகை தந்த பெரும்பாலான இளைஞர் யுவதிகளும் தோட்டத் தொழிலாளர்களும் மலையக மக்கள் முன்னணியுடன் கைகோர்த்து கொண்டார்கள்.இவர்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்து செயற்படவுள்ளனர்.

எந்தவொரு பிரஜையும் அந்த நாட்டில் பிரஜையாக இல்லாத பட்சத்தில் அந்த நாட்டில் இருக்கின்ற எந்த ஒரு சட்டத்தையும் அல்லது சலுகைகளையும் அனுபவிக்க முடியாது இன்று மலையக மக்கள் ஏனைய சமூகங்களை போல தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் மறைந்த ரணசிங்க பிரேமதாச.

அன்று அவர் எமக்கு வாக்கு உரிமை வழங்காமல் இருந்திருந்தால் இன்று எங்களுடைய நிலைமை என்னவாக இருந்திருக்கும் இந்த வாக்குரிமை எங்களிடம் இருப்பதன் காரணமாகவே எந்த தேர்தல் வந்தாலும் எங்களுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் வந்துவிடுகின்றது. அதற்கு காரணம் எங்களுடைய வாக்குகள் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது.

அது ஜனாதிபதி தேர்தல் ஆக இருந்தால் என்ன பாராளுமன்ற தேர்தல் ஆக இருந்தாலென்ன மாகாண சபைத் தேர்தல் ஆக இருந்தால் என்ன அல்லது உள்ளுராட்சி மன்ற சபைகளாக இருந்தால் என்ன எந்த ஒரு தேர்தலுக்கும் எங்களுடைய வாக்குகள் மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறியிருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணம் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே மலையகம் குறிப்பாக நுவரெலியா மாவட்டம் பாரிய வெற்றி கண்டது இந்த வெற்றி ஜனாதிபதியின் வெற்றிக்கு பெரும் பக்கபலமாக இருந்தது.

இவ்வாறு எல்லா தேர்தல் காலங்களிலும் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் கூட தேர்தலின் பின்பு நாங்கள் கவனிக்கப்படுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது ஆனால் ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடைய அந்த தூரநோக்கு பார்வை தூரநோக்கு சிந்தனை காரணமாகவும் எமக்கு வாக்குரிமை வழங்கிவைக்கப்பட்டது.

அந்த வாக்குரிமை கிடைத்ததன் காரணமாக இன்று நாங்கள் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.அதற்காக முழுமையாக செயற்பட்ட அமரர் தொண்டமான் உட்பட அனைத்து தலைவர்களையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

அதற்கு வித்திட்டவர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா எனவே எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது அல்லது ஒரு கடமை இருக்கின்றது அது தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றிக்காக இந்த வாக்குகளை வழங்கி அவரை இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வர வேண்டியது. அவருடைய வெற்றிக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்குவார்கள் ஆக இருந்தால் நிச்சயமாக எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் அந்த பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.

அதற்கு காரணம் இந்த ஜனாதிபதி மிகவும் எளிமையானவர் பெருந்தோட்ட மக்களின் அனைத்து விதமான பிரதேசங்களையும் அல்லது பிரச்சினைகளையும் நன்கு அறிந்த ஒருவர் அப்படியான ஒருவரையே நாங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் அதுதான் இந்த நாட்டிற்கு பொருத்தமான ஒன்றாகவும் இருக்கும்.இன்று இலங்கை நாட்டில் ஒரு தமிழ் சமூகம் அதுவும் இந்திய வம்சாவளி சமூகம் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் எங்களுடைய வாக்குரிமை இந்த வாக்குரிமையின் பயனாகவே நாங்கள் இன்று பல்வேறு விதமான தேவைகளையும் சலுகைகளையும் பெற்று கொண்டிருக்கின்றோம்.

ஏனைய சமூகங்களை போல தலைநிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பு நிச்சயமாக எங்களுடைய மக்களுக்கென ஒரு தனி அழகை ஏற்படுத்தி அதன் மூலம் தான் நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார் அதனை நாங்கள் வரவேற்கின்றோம் எனவே இந்த ஜனாதிபதி மூலமாக நாங்கள் எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அவருடன் அவருடைய வெற்றிக்கு நாங்கள் முழுமையாக பங்களிப்பு செய்தால் மாத்திரமே தான் அது சாத்தியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி