இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் இதற்கு இவர் இலங்கை வங்கியின் தலைவராக நான்கரை வருடங்கள் பதவி வகித்தவராவார்.

இலங்கை வங்கியின் தலைவராக இருந்த காஞ்சன ரத்வத்தவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. அதன் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட தாமரை மொட்டுக் கட்சியின் பலம் வாய்ந்தவர்கள், காஞ்சனவின் சேவைக் காலத்தை  நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேவை நீடிப்பு தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்த போதிலும் இன்று பிற்பகல் குறித்த பதவிக்கு ரொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமை மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களைக் கவலையடையச் செய்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவின் பதவிக்காலமும் நிறைவடைந்த நிலையில், அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரொனால்ட் பெரேரா, கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் நீதி, காணி மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்த மறைந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி போல் பெரேரா மற்றும் மேல் மாகாண சபையின் முன்னாள் தவிசாளராக இருந்த குலசீலி பெரேரா ஆகியோரின் புதல்வராவார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினரான ரொனால்ட் பெரேரா, தேசிய லொத்தர் சபை மற்றும் தேசிய காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக தற்போது பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி