இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம்

அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, டயானா கமகேவின் குடியுரிமை குறித்த உடனடி அறிக்கையைப் பெற்று, அது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டது.

கமகே தற்போது தனது குடியுரிமை காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொண்ட கமகே, இலங்கைப் பிரஜை இல்லை என்ற காரணத்தினால் தான் பதவியை இழக்க நேரிடும் பட்சத்தில், பல சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர்ளும் கூட நாடாளுமன்றத்தில் அமரும் தகுதியை இழக்க நேரிடும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி