உலகின் மிகவும் சன நெரிசலான நகரங்களில் ஒன்றான பங்களாதேஷின் டாக்காவில், ஜப்பானின் நிதியுதவியில் முதல் முறையாக

மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லைன் 6 என அழைக்கப்படும் 20 கிலோமீற்றர் (12.427 மைல்கள்) நகர்ப்புற ரயில் திட்டத்தின் ஒரு பகுதியை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேற்று  புதன்கிழமை திறந்து வைத்தார்.

தலைநகரில் அதிக வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்கில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 6 மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த ரயில் சேவையானது டாக்காவின் வடக்கு மண்டலத்தை மத்திய அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் மையமாக இணைக்கிறது. இறுதியில் அது நகரத்தின் வழியாக தெற்கில் உள்ள மோதிஜீலின் நிதி மாவட்டத்திற்கு செல்லும்.

டாக்காவில், 305 சதுர கிலோமீற்றரில் (117.76 சதுர மைல்கள்) 10.3 மில்லியன் மக்கள்  மக்கள் வாழ்கின்றனர்

10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு 21 கிலோமீட்டராக இருந்த சராசரி ஓட்டுநர் வேகம் தற்போது ஒரு மணி நேரத்திற்கு 7 கிலோமீற்றருக்கும் (4.3496 மைல்கள்) குறைவாகக் குறைந்துள்ளது.

BM04.jpg

BM02.jpg

BM01.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி