அரசியலமைப்பு பேர வையூடாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அதி காரப்பகிர்வை அணுகுவரென்பதாலேயே

, கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்ததாகவும், கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளல்லவெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுற்றுள்ளது. எனினும், அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது. பெரும்பான் மைவாதத்தை தக்கவைத்துக் கொள்ளவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாதென்பதற்காகவுமே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை, நாம் எதிர்த்ததாக கூறுவது அடிப்படையற்றது.

அரசியலமைப்பு பேரவைக்கு சுயாதீன தரப்பினர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்க நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானிக்கவில்லை. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்க வில்லை எனத் தமிழ் தேசிய கூட் டமைப்பினர் வரவு செலவுத் திட்ட மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளை விமர்சித்தனர்.

75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டதை தொடர்ந்து, கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை தமது நோக்கங்களுக்காக மாத்திரம் செயற்படும் கூட்டைமப்பினரை அரசியலைமப்பு பேரவையின் உறுப் னர்களாக நியமிப்பது சாத்தியமற்றது.

தமிழ் தேசியய கூட்டமைப்பினர் அரசியலமைப்புப் பேரவையூடாக அதிகார பகிர்வை அணுகுவார்கெளன்ற காரணத்தால் அவர்களின் பெயர் பரிந்துரையை நாங்கள் எதிர்த்தோம். இது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடல்ல, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான அபிவிருத்திகளை வழங்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். அதிகாரப் பகிர்வு அபிவிருத்திக்கான வழியாக அமையாதென்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி