அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு

தேவையான விரல் பூச்சு (மை) இறக்குமதி செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அதற்கு முன்னர் தற்போது ஆணைக்குழு வசம் உள்ள மை காலாவதியாகிவிட்டதா என பரிசோதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிடம், எமது செய்திப் பிரிவு வினவியபோது, தற்போதுள்ள மை கையிருப்பு தேர்தலை நடத்த போதுமானதாக இல்லாததால், கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விரல் பூச்சு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆண்டுகளில் அவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், கடைசியாக 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்காக குறித்த விரல் பூச்சுகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடந்த அரசாங்க காலத்தில் இலங்கை மக்களுக்கு தேவையான எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா 500 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்கியது.

பின்னர், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, உணவு, மருந்து, ஏற்றுமதி தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் வேறு சில பொருட்களை வாங்குவதற்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த கடன் வசதியின் கீழ் மருந்துகள் முறையாக கட்டளையிடப்படவில்லை என கோப் குழுவில் தெரியவந்துள்ளதுடன், அதில் இரும்பை இறக்குமதி செய்யும் முயற்சி இடம்பெற்று வருவதாக சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி