75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்கப்படும்

என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

“அன்று பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியையும் முன்வைத்தனர்.

“அவ்வாறாக போர் நிலவிய நேரத்தில் சம்மந்தனும் திருட்டு தனமாக பாராளுமன்றம் சென்ற 22 பேரும் மக்களிடம் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு பிரசாரம் செய்தனர்.

“இதனால் ரணில் தோற்றார்.அவர்களை நம்பி மக்களும் வாக்களித்தனர்.சமஷ்டியை செல்லா காசாக்கினார்கள். அன்று சமஷ்டி வேண்டாம் என்று பிரசாரம் செய்த அரசியல் தலைவர்கள், இன்று நானா நீயா என்று போட்டி போடுகிறார்கள்.

“2004ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலை புலிகளையும் உள்ளடக்கியதாக அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்று உதய சூரியன் கொடி கேட்டு கொண்டது. ஆனால் சம்பந்தன் பிரபாகரனை ஒரு பக்கமாகவும் தானும் சேனாதிராஜாவும் தமிழ்ச்செல்வனோடும் இணைந்தனர்.

“எம் இனத்தை காட்டி குடுத்த சம்மந்தன்இ2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக பாராளுமன்றத்துக்கு சென்றவர், பாராளுமன்றில் இருக்க தகுதிஅற்றவர் என்றும் குற்றம் சாட்டினார்.இந்த பிரச்சினை பற்றிய கதைகளை நிறுத்துங்கள் கதைத்து ஒன்றுமாகபோவதில்லை  அனைவரும் ஒன்றிணைய போவதோ இல்லை” என்றும் மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி