முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்கா சென்றுள்ளதாக விமான

நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று திங்கட்கிழமை இவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.​கே.- 649 என்ற விமானம் மூலம் அதிகாலை 02.55க்கு பயணமாகியுள்ளனர்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக் குழந்தை ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், அங்கிருந்து அமெரிக்கா பயணமாக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அமெரிக்கா செல்லும் முடிவை மாற்றியுள்ள கோட்டாபய ராஜபக்ச, டுபாயில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, முன்னணி சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி