போதைப்பொருள் பாவனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை

ஐந்தாயிரமாக அதிகரித்துள்ளது.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லாத சுமார் 600 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது 2021 இல் 190 ஆகக் குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015இல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2,000ஆக இருந்ததுடன் 2021ஆம் ஆண்டு ஆகும் போது 5000ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமையவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை உள்ளடக்கி இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 01 கிலோ 260 கிராம் மாவா, 09 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின், 02 கிராம் 38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் 590 மில்லி கிராம் கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரச பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி