ஒக்சிஜன் இயந்திரங்களைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கான டெண்டர் அனுமதிப்பத்திரம்

சமர்ப்பித்த நிறுவனங்களை நீக்கிவிட்டு, அதிக விலை கோரிய நிறுவனத்துக்கு வழங்க முயற்சித்த சுகாதாரத்துறஒக்சிஜன் இயந்திரங்களைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கான டெண்டர் அனுமதிப்பத்திரம் சமர்ப்பித்த நிறுவனங்களை நீக்கிவிட்டு, அதிக விலை கோரிய நிறுவனத்துக்கு வழங்க முயற்சித்த சுகாதாரத்துறையின் மேலதிகச் செயலாளர் ஒருவர் தொடர்பான தகவல்களை, தேசிய சுகாதாரத் தொழிற்சங்கமொன்று வெளியிட்டுள்ளது.

இந்த உயர்ந்தபட்ச இயந்திரங்களின் சுத்திகரிப்புத் திறன் 93 சதவீதமாகும். இருப்பினும், அதனைத் 95 சதவீதமென்று குறிப்பிட்டுக் கொள்வனவு செய்ய முயற்சிக்கும் மேலதிகச் செயலாளரால், ஓர் இயந்திரத்தால் இருநூறு மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை நட்டம் ஏற்படுவதாகவும் இதற்காகத் தொழில்நுட்ப ரீதியிலான மோசடிகளை அவர் புரிந்துள்ளார் என்றும், மேற்படி தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்களுக்கான தரம் தொடர்பில் எந்தக் கவலையுமின்றி, தனது சட்டைப் பையை நிரப்பிக்கொள்வதற்காகவே அவர் இந்த மோசடியில் ஈடுபடுகின்றார் என்று, சுகாதார நிபுணர்களின் தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், உலக நிதித் திட்டத்தின் கீழ் இரு இயந்திரங்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் 7 இயந்திரங்களையும் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சுகாதார அமைச்சுக்கு 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படவுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நிதித் திட்டத்தினால் இதற்காக ஒரு மில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துரைப்படி, சுகாதார அமைச்சின் கொள்வனவு 394 மில்லியன் ரூபாயாக்கு மேற்படக் கூடாது. இருப்பினும், அதிகப்படியான கொள்வனவுக்காகவே நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உலக நிதித் திட்டத்தின் நிதியுதவியை இலக்காமலிருக்க, அவர்களின் பரிந்துரைக்கு அப்பாற்பட்ட தொகையை வற் வரியை அரசாங்கத்தினால் செலுத்தும் தந்திர உபாயமொன்று தீட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இயந்திரத்தைக் கொள்வனவு செய்யும் நிறுவனத்தின் வற் வரியை அரசாங்கத்தின் ஊடாகச் செலுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், 9 இயந்திரங்களுக்கான நிதி இழக்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்துக்கு 350 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இதேவேளை, இந்தத் தந்திர முயற்சி தொடர்பில. உலக நிதித் திட்டம் அறிந்துகொள்ளுமாயின், இலங்கை தொடர்ந்து 10 வருடங்களுக்குப் பாதிப்பை எதிர்நோக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி