பல்லேகலவில் நாளை (25) ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி குழாமிற்கு இதுவரையில் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைக்கவில்லை

என மிகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அணியில் சிரேஷ்ட வீரர் ஒருவரை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆட்சேபனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான அங்கீகாரம் இன்று பிற்பகல் அணிக்கு வழங்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சிரேஷ்ட வீரர் உட்பட இலங்கை அணியினர் சில தினங்களுக்கு முன்னர் பல்லேகல மைதானத்திற்கு சென்று பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி