கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் நம்பிக்கையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அவர்கள் முன்வைத்த பொருளாதார சீர்திருத்தங்கள் முழுமையாக அமுலாகாது என்றும் அது வரையறுக்கப்பட்டதாக்க இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மீண்டும் நெருக்கடியில் வீழ்த்தி விடாமல் இருக்க நாம் சிந்தித்து செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை மேல், வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலையிலும் பொருளாதார வலயங்கள் நிறுவப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 • வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க புதிய பொருளாதார முறைமை – ஜனாதிபதி
 • சுற்றுலாத்துறை அபிவிருத்திற்காக 50 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி
 • 8.3 வீதமாக உள்ள தேசிய வருமானத்தை 2025 ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி
 • ஊவா வெல்லஸ பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்றை நிறுவுவதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி
 • பேராதனை, ருகுணு மற்றும் யாழ். பல்கலைக்கழகங்களில் முதுகலை மருத்துவப் பட்டங்களை ஆரம்பிப்பதற்கு 60 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி
 • கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை அபிவிருத்திக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு. 1,000 கிராமப்புற பாடசாலைகளுக்கு இணைய வசதி – ஜனாதிபதி
 • தனியார் துறை ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் சுகாதார காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும. – ஜனாதிபதி
 • நன்னீர் மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி
 • மின்சாரம் போன்றவற்றுக்கான VAT வரி விலக்குகள் மீளாய்வு நடவடிக்கைகளின் பின்னர் நீக்கப்படும் – ஜனாதிபதி
 • வறிய மற்றும் நலிவடைந்தவர்களை பராமரிப்பது குறித்து முழுமையான கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி
 • அரச சேவையை முழுமையாக மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி
 • 2023 ஜனவரி 1 முதல் பல இறக்குமதி வரிகள் படிப்படியாகக் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் – ஜனாதிபதி
 • AL பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் (ஜனாதிபதி நிதியிலிருந்து) – ஜனாதிபதி
 • ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் 2 ரூபாய் வரி அறவிடப்படும் – ஜனாதிபதி
 • அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசாங்கம் கணிசமான நிவாரணங்களை வழங்கும் – ஜனாதிபதி
 • சீர்திருத்தங்கள் / நவீனமயமாக்கலின் அடிப்படையில் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7% – 8% உயர் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைய எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
 • கடவுசீட்டு மற்றும் விசா கட்டணத்தை உயர்த்துவதற்கு திட்டம் – ஜனாதிபதி
 • ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும்
 • வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய மின்கலன் வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி
 • காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு- ஜனாதிபதி
 • தேசிய மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் வார்டுகளுக்கு கட்டணம் செலுத்தும் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி
 • குடிநீர் போத்தல்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர் முறைமை அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி