விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்கள் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் நாளை ஆரம்பமாகவுள்ளது.


இதன்படி நாளை (15) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஒக்டோபர் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து ஏதேனும் தொகை செலுத்த வேண்டியது இருப்பின் சட்டரீதியாக வெளியேறும் முன் அத்தொகையை செலுத்த வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 


 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி