படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் இன்று  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர்கள் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் உறவினர் ஒருவரின் நிகழ்வுக்காக இந்த பகுதிக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல் போன பெண்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி