இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார இறையாண்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எதிர்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலையில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்ததாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த செலவு 7,885 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டின் மதிப்பிடப்பட்ட செலவீனத்துடன் ஒப்பிடுகையில் இது 1,785 பில்லியன் ரூபா அதிகரிப்பு எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி