நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

சபாநாயகர் தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தேசிய மக்கள் சக்தியின் பிரேரணையின் பிரகாரம், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

நவம்பர் 9ஆம் திகதி, மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை, கலால் சட்டத்தின் கீழ் இரண்டு அறிவிப்புகள், நாணயச் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவு, அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் மூன்று விதிமுறைகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 10 மற்றும் 11ம் திகதிகளில் பல சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி