அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.



சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் இலங்கையின் திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு செல்வதற்கு அரசியல் விருப்பமும் வலுவான நடவடிக்கைகளும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் நேற்று நாட்டை வந்தடைந்தார். அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அரசாங்கப் பிரதிநிதிகளையும் பொருளாதாரத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கி செல்லும் வழியை மையமாகக் கொண்டு  இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி