உரிய நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.


இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன்தினம் (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இதனிடையே, இருபத்தி இரண்டாவது திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை எதிர்ப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனவே இருபத்தி இரண்டாவது திருத்தத்தை நிறைவேற்றினால் பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரின் ஆதரவையும் பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருபத்தி இரண்டாவது திருத்தம் காலத்தின் தேவை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அதனை ஏற்று நடத்துவதற்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி