‘ஒன்றாக எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் 75வது சுதந்திரத் தினக் கொண்டாட்டங்கள் காலி முகத்திடல் மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.

சுதந்திர தின விழா, சைக்கிள் சவாரி, பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள், வரலாற்று மற்றும் அரிய புத்தகக் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையப்படுத்தி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தேசிய பூங்காக்களை இலவசமாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களை அடிப்படையாகக் கொண்டு அன்றைய தினம் கலாசார, சமய மற்றும் சமூக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி