பொதுமக்கள் போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சிறு பிள்ளைகள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ள நிலையில்இ பெற்றோருக்கு, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தற்போது கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இச்சம்பவத்தினால் குழந்தைக்கு ஏதேனும் மன உளைச்சல் அல்லது அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் கூறுகிறார்.

பிள்ளைகளுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் பெற்றோர், பிள்ளைகளை போராட்ட களத்திற்கு அழைத்துவந்திருந்தால், அவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னரும் இந்த நாட்டில் போராட்டங்கள் நடந்துள்ள போதிலும் அதில் சிறுவர்கள் அழைத்துவரப்பட்டதாக தகவல்கள் இல்லை. ஆனால் அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் இருந்ததையும் காண முடிந்தது பெற்றோர் தமது பிள்ளைகளை இங்கு அழைத்துவந்திருக்கின்றனர். எதற்காக இந்தப் போராட்டங்கள் என்று சிறு குழந்தைகளுக்குத் தெரியாது என்றும் தலைவர் கூறுகிறார்.

''ஆர்ப்பாட்டங்களின் போது தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குழந்தைகளுக்குப் புரிவதில்லை. குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் கூட நிலைமையை சமாளிக்க முடியாமல் போகும். இவ்வாறான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதன் மூலம் விபத்துக்கள்இ அடக்குமுறைகள்இ உயிருக்கு ஆபத்து போன்றவற்றுக்கு ஆளாக நேரிடும்'' என்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், போராட்டக்காரர்இ சமூகக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த விடயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இது குழந்தையின் நலன் கருதி விடுக்கப்பட்ட வேண்டுகோளாகும். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின்போது, மகிந்த ராஜபக்ச செல்லும் கூட்டங்களில், முன்னேற்பாடு செய்யப்பட்டு, குழந்தைகளை தூக்கி, தழுவி, புகைப்படங்களை எடுத்துக்கொள்வது வழமைக்கமாக நடந்துவந்துள்ளன. பெற்றோர் சோதனை செய்யப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, அரசியல் புகழ்ச்சிக்காக இந்தச் சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே குற்றஞ்சுமத்தியிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

sdfsdf

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி