காலிமுகத்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசாரின் தலையீட்டால் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை

நலமாக உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தைக்கு வெளிப்புற அல்லது உள்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும் குழந்தை நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு சிறுவர்களை அல்லது குழந்தைகளை அழைத்துச் செல்வது பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை பெற்றோர் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கடந்த ஒன்பதாம் திகதி காலிமுகத்திடலில் நினைவேந்தல் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இதன்போது பொலிசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிசாருக்கும், ஆர்ப்பாட்டக் கார்களுக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளு காரணமாக குழந்தைகளுடன் இருந்த தாய்மார் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இதேவேளை, சிறுவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபைக்குச் சென்று நேற்று (10) முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான போராட்டங்களுக்கு சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அழைத்துச்செல்லப்படக்கூடாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி