'தேசிய பேரவை' நியமித்த தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான உப குழுக்கள் இன்று கூடவுள்ளன.குறித்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் தேசிய பேரவையால் நேற்று நியமிக்கப்பட்டனர்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான நாடாளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதற்கான உபகுழுவுக்கு தேசிய பேரவையின் உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், நசீர் அஹமட், அலி சப்ரி ரஹீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறுகிய மற்றும் மத்திய கால பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக உபகுழுவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தன், றிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், எம்.ராமேஷ்வரன், மனோ கணேசன், நசீர் அஹமட், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி