களனிவெளி புகையிரத பாதையின் ஒரு பகுதி திருத்த வேலை காரணமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி கொஸ்கம முதல் அவிஸ்ஸாவளை வரையான பகுதி மூடப்படவுள்ளது.

7 ஆம் திகதி இரவு 8.30 மணி முதல் 10 ஆம் திகதி காலை 6.00 மணி வரை அந்த பகுதி மூடப்படும் என புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது களனிவெளி புகையிரத பாதையில் கொஸ்கம வரை மாத்திரம் புகையிரதம் இயக்கப்படும்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி