இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) அழைப்பாணை விடுத்துள்ளது.நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தண்டிக்கப்பட கூடாது எனின் ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி அதற்கான காரணங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி