அமெரிக்க மனிதாபிமான நன்கொடையாளர் அமைப்பான ஹோப் வேர்ல்ட்வைட் நன்கொடையாக வழங்கிய 2.74 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான

மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை ஒக்டோபர் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம், அமெரிக்க மனிதாபிமான நன்கொடையாளர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு, 2022 ஜூலை முதல் ஒக்டோபர் வரை இலங்கைக்கு இலவச மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

மூன்று கட்டங்களாக ஏற்கனவே சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், நான்காவது கட்டமாக ஒக்டோபர் 02 ஆம் திகதி மருந்து பொருட்கள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி