Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இருளில் மூழ்கிய இலங்கை: ரூ. 600 கோடிக்கும் அதிக நேரடி பொருளாதார இழப்பு

T

The Leader Desk

டிசம்பர் 10, 2023 • 4:59 PM

இருளில் மூழ்கிய இலங்கை: ரூ. 600 கோடிக்கும் அதிக நேரடி பொருளாதார இழப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர் மற்றும் செயலாளர் அதற்கு நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
  • நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அத்தோடு, நாடு முழுவதும் மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்ட உத்தரவுகளை மின்சார சபை மீறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
  • இந்நிலையில், சுமார் 05 மணித்தியாலங்கள் நேற்று மின்வெட்டு காரணமாக 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய மின்சார அமைச்சர் மற்றும் செயலாளர் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

அமைச்சர் மற்றும் செயலாளர் அதற்கு நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, நாடு முழுவதும் மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்ட உத்தரவுகளை மின்சார சபை மீறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி 2296/38 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக மின்சார அமைச்சுக்கும் இலங்கை மின்சார சபைக்கும் தாம் தலைவர் பதவியில் இருக்கும் போது மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், சுமார் 05 மணித்தியாலங்கள் நேற்று மின்வெட்டு காரணமாக 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய மின்சார அமைச்சர் மற்றும் செயலாளர் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...