ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாளை புதன் கிழமை தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள இருந்த போதிலும் அதனை வியாழக்கிழமை வரை

பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.  நாளை புதன்கிழமை தான் வேறொரு வேலையில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (23) இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் அன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு செயற்குழு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச விடுத்த வேண்டுகோளை பிரதமர் நிராகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு விஷேட அழைப்பு!

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தற்போது பேசப்படும் அக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) விஷேட அறிக்கையினை வெளியிட்டு கட்சியிலிருந்து விலகிச் சென்ற அனைவரையும் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் மீண்டும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி