கொழும்பு தாமரைத் தடாககத்தின் நிர்மாணப் பணிகளின் போது சீனா நிறுவனத்தின் ஊடாக பாரியளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேனாவினால் அந்தக் கோபுரத்தின் திறப்பு விழாவின் போதுதெரிவிக்கப்பட்ட விடயம் பொய்யானது என பதிலளித்து உடனடியாகவே ஊடக அறிக்கையினை வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷவின் மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்காது மௌனமாக இருப்பதற்கான காரணம் என்ன? என “கழம்பு டெலிகிராப்” இணையத்தளத்தின் ஆசிரியர் உசிந்து குருகுலசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ட்வீட்டர் பக்கத்தின் ஊடாக குறிப்பொன்றை பதிவு செய்து இக்கேள்வியை எழுப்பியுள்ள கழம்பு டெலிகிராப் இணையத்தள ஆசிரியர், அதில் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எம் அனைவருக்கும் இப்போது தெரியும்,  சிரிசேனா லோட்டஸ் டவர் திட்டத்தின் போது 200 கோடியை உலகிலேயே இல்லாத நிறுவனம் ஒன்றிற்குச் செலுத்தியுள்ளதாக பொய் கூறியது. 
மஹிந்த ராஜபக்ஷ துரிதமாகச் செயற்பட்டு அது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்தானே. அந்த ஆர்வம் ஏன் மிக் விமான கொடுக்கல் வாங்கள் விடயத்தில் இல்லாமல் போனது?
உலகில் எங்குமே இல்லாத பெலிமிஸ்ஸா என்ற நிறுவனத்திற்குத்தான் அந்த கொடுப்பனவை கோத்தாபய செய்தார். ஏன் இப்போது கோத்தாபய அல்லது மஹிந்த அதைப் பற்றி ஊடக அறிவித்தல் ஒன்றை வெளியிடவில்லை?
இலங்கையின் அரசாங்கம் பெலிமிஸ்ஸா நிறுவனத்திற்குச் செலுத்திய தொகையும், யுக்ரேன் அரசாங்க நிறுவனம் ஒன்றிற்கு யுக்ரிமெஸ் நிறுவனத்திற்கு உண்மையில் கிடைத்த பணத்திற்கும் இடையிலான வேறுபாடு டொலர் மில்லியன் 7 ஆகும்”

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி