கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவண்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கும் எதிராக சட்டத்திற்கு முரணாகச் சென்று வழக்குத் தாக்கல் செய்யுமாறு

அரசியல்வாதிகளினால் அழுத்தங்கள் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் குரல் பதிவு  தொடர்பில் தற்போது அரசியல் களத்தில் கடும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளதோடு, அது தாமரை மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்குச் சாதகமாக அவரது பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், அரசியல் அழுத்தங்களின் காரணமாக அவண்காட் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஊடாக கோத்தாபய ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுத்து வந்த அரசியல் வழக்குத் தாக்கல் செய்யும் செயற்பாடுகள் வெளிவந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ களுத்துரை நகரில் நேற்று (21) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது கூறினார்.

சட்டமா அதிபா் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனராகப் பணியாற்றும் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களினுள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  இந்நிலையினுள் நேற்று (21) சமூக வலைத்தளத்தின் ஊடாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ள தில்ருக்ஷி விக்ரமசிங்க, “உங்களோடு மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை எனக்கு ஏற்படுத்தியது எந்த அமைச்சர், என்ன காரணத்திற்கு என்ற விடயங்களை மக்களுக்கு கூறுங்கள்” என அறிவித்துள்ளார்.

அவரது முகநூலில் பதிவிடப்படடுள்ள விடயம் தொடர்பில் சமூக வலைத்தளத்தினுள் கடுமையான பேச்சுக்கள் தோன்றியிருப்பதோடு, பிரதருக்கு நெருக்கமான அமைச்சர்கள் திருட்டுத் தனமாக ராஜபக்ஷக்களுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டு அவர்களுக்கு உதவி ஒத்துழைப்புக்களைச் செய்துள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

இது பிரதமரின் தரப்பினரால் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பிரசார ஊக்குவிப்பே என அவ்வாறான சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது முகநூல் பக்கத்தில் பதிவிடுள்ள கருத்துக்கு அமைய மிகத் தெளிவாகவே அவருக்கு நிஸ்ஸங்கவைத் தொலைபேசியில் பேசுவதற்கு தொலைபேசியை வழங்கியிருப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவராகும்.

அந்த அமைச்சர் யார் என்பதை அவர் வெளியிடாதிருப்பது தற்போது அவர்  சட்டமா அதிபர்  திணைக்களத்தின் பிரதி சொலிஸிட்டர் ஜெனரால பணியாற்றும் அரச அதிகாரி என்பதானாலாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி