ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையில்  இடம்பெற்ற
பேச்சுவார்த்தை சாதகமாக நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது கட்சியில் பிளவுகள் ஏற்படாதவண்ணம் எந்தவித வாக்கெடுப்பும் இன்றி செயற்குழுவின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு இணக்கபாடு காணப்பட்டுள்ளது.  அத்துடன் தற்போது செயற்படும் கட்சியின் செயற்குழுவில் புதிதாக எவரையும் இணைத்துக் கொள்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை இன்று (22) காலை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதோடு, இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காகச் சென்று கட்சியைச் சேர்ந்த ஒருத்தருக்கு ஒருத்தர் முரண்பட்டுக் கொண்டு கட்சி பிளவு படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தையின் மத்தியஸ்தராகச் செயற்பட்டுள்ளார்.

இது தொடர்பான மற்றொரு பேச்சுவார்த்தை நாளை (23) கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி