இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, “இந்த ஜனாதிபதி முறையினை ஒழிக்க வேண்டும் என 1994ம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் வாக்குறுதியளித்தார்கள். 1994ம் ஆண்டில் சந்திரிக்கா பண்டாரநாயக அம்மையார் வாக்குறுதியளித்தார். 2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். 2015ம் ஆண்டில் நாம் வெற்றி பெற வைத்த மைத்திரிபால சிரிசேனாவும் கூறினார்.
ஆனால் இவர்கள் மூவரில் தனது அதிகாரங்களைக் குறைத்துக் கொள்வதற்கு 19வது அரசியலமைப்புத் திருத்தத்துடன் தானாகவே முன்வந்தது தற்போதைய ஜனாதிபதியாகும். அவரது காலத்தினுள் இவ்விடயங்கள் இடம்பெறும் என சிலர் எதிர்பார்த்தார்கள். விஷேடமாக அவரது காலம் நிறைவடைவதற்கு முன்னர் இவ்விடயங்கள் இடம்பெறும் என்றும் சிலர் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் இன்று நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலுக்கான தினமும் அறிவிக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவார்கள். இதனடிப்படையில் நாம் அனைவரும் தேர்தலுக்கு ஆயத்தமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த ஜனாதிபதி முறையினை நீக்குவது அல்லது தேர்தலை நடத்தாமலிருப்பது தொடர்பில் பேசுவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை.
2018ம் ஆண்டு ஒக்டோர்பர் 26ம் திகதிதான் இந்த ஜனாதிபதி முறையின் பயங்கரமான நிலையினை நாம் கண்டோம். அப்படியாயின் இதனை அப்போதே செய்திருக்கலாம். நாம் அன்று கௌரவ பிரதமரையும், எமது அரசின் அனைவரையும் பலவந்தமாக வெளியே போடுவதற்கு முயன்ற நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அன்று அரசாங்கத்தின் அனைத்து தரப்பினருடனும் இணைந்து முக்கியமாக நீதிமன்றங்களில் சுயாதீனத் தன்மையினை ஏற்படுத்தியதன் காரணமாக எவராலும் நீதிமன்றங்களுக்கு அழுத்தங்களைச் செய்ய முடியாத நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்ததனால் மீண்டும் பிரதமரையும் அரசாங்கத்தையும் நியமிக்க எம்மால் முடிந்தது என்றார்.
ஹக்கீம் மீது கை வைக்க இடமளிக்க மாட்டோம்” - நீதி அமைச்சர் தலதா

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறினார் எனக் குற்றம் சுமத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக எவ்வாறான விசாரணைகளையும் மேற்கொள்வதற்கு
இடமளிக்கப் போவதில்லை என்றும், அவருக்காக கூட்டாக முன்நிற்பதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி தலதா அத்துகோரள தெரிவித்தார். நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.