சிலர் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எதிா்ப்பைக் காட்டுவதற்கு காரணம் சாதி பிரச்சினையாக இருக்கலாமோ என்ற வலுவான சந்தேகம்

தோன்றியிருப்பதாக அரசிஙாகத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

அச்சந்தர்ப்பத்தில் உடனடியாக அதற்கு பதலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தான் சாதிகளைப் பார்ப்பவன் அல்ல என்றும்,  முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நான் 2010ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமித்ததாகக் கூறியதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாசவின் தந்தையான ஆர். பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரான சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராகச் செயற்பட்ட காமினி திசாநாயக்காவின் மகன் அமைச்சர் நவீன் திசாநாயக்கா, சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை வழங்குவதற்கு எதிராகச் செயற்படும் குழுவில் முக்கியமான ஒருவராக இருப்பது முக்கியமான விடயமாகும்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் பிரதமர் ரணிலுக்கு ஆதரவாகப் பேசிய இருவருள் ஒருவர் அமைச்சர் நவீன் திசாநாயக்காவாகும். மற்றையவர் அமைச்சர் ராஜித சேனாரத்னவாகும்.

சஜித்துக்கு “சேர்” கூறுவதற்கு விரும்பாதவர்கள்!

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த செயலமர்வின் போது கருத்து தெரிவித்த அக்கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கே. டி. லால்காந்த, சஜித்திற்கு “சேர்” கூறுவதற்கு விருப்பமில்லாத அக்கட்சியைச் சேர்ந்தவர்களே அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை வழங்குவதற்கு எதிராகச் செயற்படுவதாகக் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி