அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் 106 உறுப்பினர்களின் பெரும்பான்மையால் மேற்கொள்ளப்பட வேண்டும் என

  அமைச்சர் பட்டாலி சம்பிகா ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், டிசம்பர் 8 ஆம் தேதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.   மூன்று விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.  

1. இந்த ஜனநாயக முகாமின் வேட்பாளர் வெற்றிபெற பரந்த ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும்.
2. அதே கூட்டணிக்கான காலக்கெடுவை உருவாக்க வேண்டும்.

3. ஒருமித்த கருத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் ஆகஸ்ட் 24 ம் தேதி  கட்சி யாப்புப் பற்றி விவாதித்த பின்னர் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி  முக்கியஸ்தர்கள் உடனடியாக வேட்பாளரை பரிந்துரைக்குமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச  ஆகியோர் முன்வந்து, ஒரு உடன்படிக்கைக்கு வரமுடியாததால்,  தீர்க்க முடியாது.எனவே 106 எம்.பி.க்களையும்  வரவழைக்க வேண்டும். அவர்களே  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு  அவர்களுக்கு மிகவும் பிடித்த வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி