கஷ்டமான எல்லா சந்தர்ப்பங்களிலும் கட்சியைப் பாதுகாத்த தலைவராக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தால் தேர்தலில் போட்டியிடுவதாகவும்,

அதனைச் செய்ய முடியாது போனால் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  பியகம மற்றும் களனி தேர்தல் தொகுதிகளின் ஐக்கிய தேசிய கட்சியின் பழைய உறுப்பினர்களை கொழும்பு அலறி மாளிகையின் சந்தித்த போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

70 வயதாகும் வரையில் இலங்கை அரசயில் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த தனக்கு அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது அந்தளவுக்கு சிரமமானது அல்ல என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் நியமனம் கிடைக்காவிட்டால் தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக வார இறுதி பத்திரியும் செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில், சஜித்துடன் வாக்கெடுப்புக்கு வரமாட்டார்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டால் அதனால் கட்சி இரண்டாகப் பிளவுபடுவதற்கான ஆபத்து காணப்படுவதால் அதற்கு இடமளிக்காமலிருப்பதற்கு ஐ.தே.கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு அமைய இவ்வாறான சந்தர்ப்பத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இல்லை என்றும் ரணில் சார்பானவர்களின் கருத்தாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஐ.தே.கட்சியின் செயற்குழு 90 பேருக்கு அதிகமானவர்கள் அங்கத்துவம் வகிக்க வேண்டியுள்ள போதிலும் தற்போது அக்குழுவில் 63 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் இதுவரையில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என பகிரங்கமாகவே கூறியுள்ள நிலையினுள் பிரதமர் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவருக்குள்ள அதிகாரங்களின் கீழ் தனக்குச் சார்பான 30 பேரை புதிதாக செயற்குழுவில் இணைத்துக் கொண்டு அதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதுவரையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் சஜித் பிரேமதாச அபேட்சகராக நியமிக்கப்பட வேண்டும்  என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குமாறு குறிப்பிட்டு கடிதம் ஒன்றில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டுள்ளதோடு, அவர்கள் அதனை அடுத்த சில தினங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி