இன்று நாடளாவிய ரீதியில் 1000 அதிகமான தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக பாரிய பணிபுறக்கணிப்புக்கு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.


பல தொழிற்கங்கள் கொழும்பில் தமது ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்த நிலையில், கொழும்பின் பல பகுதிகளும் முடக்கப்பட்டன.

நாட்டின் பல பிரதான நகரங்கள் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. பாடசாலைகள் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு புகையிரத சேவை தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்தன.

எனினும் தனியார் மற்றும் அரச பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகின்றன.
தற்போதைய அரசை பதவி விலகுமாறு கோரும் வகையிலான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டு என்பவற்றை கண்டித்தும் மக்கள் கோசங்களை எழுப்பினர்.

கொட்டகலை பத்தனை சந்தியில் தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பத்தனை கிறேக்கிலி, மவுண்ட்வேர்ணன், இராணியப்பு, பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், பத்தனை முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

ne

நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று நண்பகல் வைத்தியசாலை முன்பாக அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், மன்னார் பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நான்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்க அமைப்புக்கள் நண்பகல் 12 மணி தொடக்கம் இரண்டு மணி வரை வைத்தியசாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு தங்கள் போராட்டத்ததை முன்னெடுத்திருந்தனர்.

nu

நுவரெலியாவில் இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் விடுதலை முன்னணி ,மலையக ஆசிரியர் முனனணி,இலங்கை கல்வி சம்மேளனம், முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஆகியன ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து நுவரெலியா மாநகரில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

ban

பலாங்கொடையிலும் இது போன்று கல்வி வலயத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி