தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளுக்கு தேவைப்படும் எரிபொருளை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பெட்ரோலிய உற்பத்திச் சட்டத்தின் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.

அவர்கள் தெரிவு செய்யப்பட்ட மின்சாரம், மீன்பிடி மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய 2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க சட்டத்தை திருத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலோசனை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிபொருள் இன்றியமையாதது என்பதால், பொருளாதாரத்தின் குறிப்பிட்ட துறைகளுக்குத் தனித்தனியாக இறக்குமதி செய்து தேவையான அளவு எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான உரிமங்களை வழங்குவது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி