நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளரை நியமிக்கும் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்

பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்கிக் கொள்வதற்காக தற்போது கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்குவதற்காக  மக்கள் விடுதலை முன்னணியினால் தயாரிக்கப்பட்டுள்ள  20வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியிடம் கோரிக்கை விடுத்திருந்ததோடு, இதற்கு பதிலளித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கா, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்குவதற்கான திருத்தம் தேவையாயின் அரச தரப்பினால் அத்திருத்தத்தைக் கொண்டு வருமாறும், அதற்கு தமது கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவைச் சந்தித்து ஜனாதிபதி முறையினை நீக்கும் பிரேரணைக்கு ஒத்துழைப்பை கேட்டுக் கொண்டதன் பின்னரே பிரதமர் ரணில் மக்கள் விடுதலை முன்னணியிடம் இந்த யோசனையினை முன்வைத்திருந்தார்.

ஆஷூ ஊடாக முன்வைக்கப்பட்ட யோசனை!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்குவதற்கு அடுத்த ஓரிரு வாரங்கள் என்றாலும் போதும் என பிரதமரின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமானவரான கலாநிதி ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.  இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆஷூ கூறும்போது,




“சில தினங்களுக்கு முன்னர் தேசிய தொலைக்காட்சி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதன் ஊடாகவும் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் இருக்கும் முறையற்ற அதிகாரங்களைக் காண முடியும். இதுதான் இந்நாட்டிற்கு இருக்கும் பிரச்சினை. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி  என்ற வகையில் மேற்கொள்ளப்படும் சில சில தீர்மானங்களினால் இந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. கடந்த ஒக்டோபர் 26ம் திகதி இடம்பெற்ற ஜனநாயக விரோத, அரசியலமைப்பு விரோத சதியின் ஊடாக இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் இருக்கும் மோசமான பிரதிபலன்களை முழு நாடும் கண்டு கொண்டது.

எனவேதான் நாம் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு உண்மையாகவே மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டும் என்ற விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தோம்.

கடைசி எதிர்பார்ப்பு!

இந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இதைப் பற்றி பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். ஜனாதிபதி தேர்தல் காலத்தில்தான் இந்த விடயம் வருகின்றது. எனவே கடைசி எதிர்பார்ப்பதாக இது மேற்கொள்ளப்படும் என நான் நம்புகின்றேன்.

தற்போது எமக்கு இதற்கான இடம் கிடைத்திருக்கின்றது. இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாகவும் எம்மால் இதனைச் செய்ய முடியும். இதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. 20வது திருத்தத்தைக் கொண்டு வருமாறு மக்கள் விடுதலை முன்னணியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 20வது திருத்தத்தைக் கொண்டு வருமாறு கேட்டுள்ளார்கள்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி