மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணியாக இதுவரை, சமூக ஊடகம், குடும்ப நிலைமை உள்ளிட்ட முக்கிய காரணிகள் இருந்து வந்த நிலையில் இன்று அவை அனைத்தையும் மிஞ்சும் அளவில் நாட்டின் பொருளாதார நெருக்கடி தாக்கம் செலுத்தியுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார அழுத்தத்தை பலரால் சமாளிக்க முடியாமல் இதய நோய்கள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மன அழுத்தம் அதிகரிப்பு, அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள கடுமையான வெயிலில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளமையும், சில சமயங்களில் அப்படி காத்திருந்தும் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது போவதனால் ஏற்படும் விரக்தியும் மேலும் பொருட்களின் அதிகரிக்கும் விலையும் அதனை கொள்வனவு செய்ய கையில் போதுமான பணமின்மையும் காரணமாகி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிலைமை அதிகரித்த மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை உட்பட மற்ற தொற்று அல்லாத நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.

அத்தோடு டொலர் தட்டப்பாடோடு அதிகரிக்கும் நோயாயர் எண்ணிக்கையுடன் தேசிய வைத்தியசாலையில் எதிர்காலத்தில் மருந்துகள் இல்லாமல் போகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது திடீர் மாரடைப்புக்கு சிகிச்சைக்கு சிறியளவிலான மருந்துகளே உள்ளதாகவும், ஆனால் எதிர்காலத்தில் மருந்துகள் முடிவடையும் பட்சத்தில் வைத்தியசாலை ஊழியர்களும் நோயாளர்களும் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் வைத்தியர் ரணசிங்க வலியுறுத்துகின்றார்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி