நாட்டின் உள்ளே பாரிய மக்கள் போராட்டம் ஒன்று ஏற்பட்டு இருக்கின்றது. அதனை யாரும் மறுக்க முடியாத அளவு எழுச்சி பெற்ற இளைஞர் போராட்டமாகும்.

வரலாற்றில் எந்த ஒரு போராட்டமும் இவ்வாறான சவால் மிக்கதாக காணப்படவில்லை.சிறியோர் தொடக்கம் பெரியவர்கள் வரை கவர்ச்சியை பெற்றுக் கொண்ட ஒரு போராட்டம் ஆகும். அதனால் போராட்டம் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மக்கள் எழுச்சி நாடு முழுவதும் ஒரு பொதுவான விடயமாக மாறியுள்ளது. 

உண்மையில் இந்தப் போராட்டத்தின அழுத்தம் பெரியவர்களை சூடாக்கி கொதிக்க வைத்துள்ளது. அந்த அளவு தூரம் ராஜபக்சக்கள் பின்னடைவுக்கு சென்ற ஒரு போராட்டம் தான் இது. இன்னும் ராஜபக்சக்கள் வீட்டுக்கு அனுப்புவதற்கு இந்த போராட்டம் ஏதுவாக அமையாவிட்டாலும் ராஜபக்சக்கள் அனைவரையும் அரசியல் அனாதைகளாக இது மாற்றிய ஒரு போராட்டம் என்று குறிப்பிடலாம். 

அந்த அழுத்தம் நேற்று பாராளுமன்றத்திலும் காணக்கூடியதாக இருந்தது. மொட்டுவின் இரண்டாவது பெரிய கட்சி ஆகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்பட எதிர்க்கட்சியில் அமர்ந்து அமர்ந்து கொண்டமை இந்தப் போராட்டத்தின் ஒரு முக்கியமான அம்சமாக காணப்படுகின்து.

 அதே போன்று இவ்வளவு காலமும் சுயாதீனம் என்று இருந்த விமல், கம்மன்பில, வாசு போன்றோரும் எதிர்க்கட்சிக்கு வரவைப்பதற்கு இந்த போராட்டம் காரணமாக அமைந்தது. எவ்வாறு இருப்பினும் எதிர்க்கட்சி செல்வதற்கு அவர்கள் எடுத்த தீர்மானமாத்தை ரட்டே ரால பாராட்டுகின்றார்.

பாராட்டும் அதேவேளை அவர்களுக்கு அவதானத்தையும் குறிப்பிடவேண்டியுள்ளது. அவர்கள் எதிர்க்கட்சிக்கு வந்து சஜித்தின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த வேண்டும் என்றல்ல.பாட்டலி, அனுரவின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த வேண்டும் என்றல்ல. அவர்களுக்கென்ற ஒரு நிகழ்ச்சிநிரல் காணப்படுகின்றது. 

உண்மையில் இந்த இடத்தில்தான் ரட்டே ரால குறிப்பிடுவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் உள்ளிட்டு அணியினரது நிகழ்ச்சி நிரல் என்பது இரண்டு தன்மை கொண்டதாகும். பரவாயில்லை. அதனை வைத்துக் கொள்ளுங்கள்.ரட்டே ரால நினைப்பது முடிந்தாலும் முடியாவிடினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வேறு அதிகார வேலைத்திட்டம் காணப்படுகின்றது.

 இருப்பினும் ரட்டே ரால நம்பிக்கை கொள்வது விமல், கம்மன்பில,வாசுவிடம் அவ்வாறான ஒரு திட்டம் இல்லை என்று. அதிகார அரசியலில் அவர்களது அடுத்த கட்டம் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ராஜபக்சக்களின் ஒரு வாலாக அமைவது தான்.

 ராஜபக்சக்களிடம் இருந்து கழன்று வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாலாக அமைந்திருப்பதால் பிரச்சினை இல்லை. இருப்பினும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு சஜித்தின் வாலாக இருக்க தேவையில்லை என்பதுபோல எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ராஜபக்சக்களின் வாலாக அமைய வேண்டிய அவசியம் கிடையாது. 

ஏனென்றால் இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக இருப்பது gota go home என்பது. அனைத்து ராஜபக்சக்களும் வீட்டுக்கு போக வேண்டும் என்பதுதான். புதிய மக்கள் ஆணையை ஒன்று கிடைக்க வேண்டும் என்று. அதற்கு அடுத்ததாக மேலும் ஒரு கருத்து ஓங்கி காணப்படாம். 

அதனால் விமல் உள்ளிட்ட அணியினருக்கு ரட்டே ரால குறிப்பிடுவது கபுடு காக் காக் என்று பெசில் எதிர்ப்பை மாத்திரம் மேற்கொள்ள வேண்டாம் என்று. அதே போன்று மஹிந்த go home மாத்திரம் குறிப்பிட வேண்டாம்.gota go home உம் இருத்தல் வேண்டும்.அதுதான் இந்தப் போராட்டத்தில் முதன்மை.ரட்டே ராலவுக்கு இவ்வாறானதொரு ஊகம் தோன்றுகின்றது.

 விமல், மஹிந்த பெசில் இல்லாத அரசாங்கத்தில் கோட்டாபயவுக்கு கயிறு வழங்குவதற்காக முயற்சிக்கின்றாறா என்று. அதனால் எதிர்க்கட்சிக்கு வருகின்ற, எதிர்க்கட்சிக்கு வந்தவர்களை இணைத்து நாட்டினுடைய நிகழ்ச்சி நிரலை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். 

அதனை செய்து மக்கள் ஆணை முன் சஜித் வெற்றி பெற்றால், அனுர வெற்றி பெற்றால், மைத்திரி வெற்றிபெற்றால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. பாட்டலி அல்லது விமல் ஆகியோர் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை . ஏனென்றால் அது புதிய மக்கள் ஆணை மூலம் பெறக்கூடிய ஒரு விடயம். 

இருப்பினும் இந்த இடைப்பட்ட காலத்தில் இரட்டை வேடங்களை அடிப்பதற்கு முற்படுவார்கள் ஆக இருந்தால் அதனை நேரடியாக கேள்விக்கு உட்படுத்த வேண்டும். வீடுகளை சுற்றி வளைத்தாவது மேற்கொள்ள வேண்டும். அதனால் இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

தற்போது விமல் அணி இந்த அரசாங்கத்தின் உள்ளே இருந்துபோது அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு மிகவும் சமீபமாக செயற்பட்டவர் தான் டலஸ். உண்மையில் டலஸ் தொடர்பில் ரட்டே ராலவுக்கு ஒரு பகுப்பாய்வு இருக்கின்றது. அரசாங்கத்திலுள்ள நபர்களிடையே ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது உண்மையில் டலஸ் முக்கியத்துவம் வாய்ந்தவர் போன்று ஒரு பெறுமதிவாய்ந்தவராக இருக்கிறார்.

டலஸ் சிறிது அரசியல் ரீதியாக மதிக்கத்தக்க ஒரு நபர்.ரட்டே ரால இந்த இடத்தில் சிறிது என்ற வசனத்தை பயன்படுத்திக் கொள்கிறார். ஏனென்றால் ராஜபக்சக்களின் இந்த அரசாங்கத்தில் அவர் இருப்பார் ஆனால் அவருக்கு இன்னும் அரசியலில் ஒரு நல்ல நபர் என்று குறிப்பிட முடியாது.

 எது எவ்வாறு இருப்பினும் விமல் அணியினர் தங்களுடைய தலைவர் என்ற அடிப்படையில் தெரிவு செய்திருப்பது டலஸ்ஸை.ரட்டே ராலவுக்கு தெரிந்த வகையில் விமல் அணி முன்மொழிவில் இடைக்கால அரசாங்கத்தினுடைய பிரதமர் டலஸ்தான். தினேஷ் தொடர்பிலும் உள்ளது.

மனதின் அடியில் இருப்பது டலஸ் தான். எவ்வாறு இருப்பினும் விமல், ராஜபக்சக்களை பார்க்கிலும் டலஸிற்கு பெறுமதி உள்ளது. எனினும் கடந்த காலத்தில் டலஸ் என்பவர் மொட்டுவின் உள்ளே விமல் அணியின் நபர். ரட்டே ரால அந்தக் கதைக்கு பாரிய சவால் விடுவது கிடையாது. இருப்பினும் தற்போது நடைபெற்று இருப்பது டலஸ் டலஸிற்கே சவால் விட்டுள்ளார். விமல், கம்மன்பில,வாசு தற்பொழுது எதிர்கட்சிக்கு சென்றிருக்கின்றார்கள். 

அடுத்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சென்றுள்ளது. அதுமாத்திரமல்ல அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த போன்றோரும் எதிர்கட்சிக்கு சென்றுள்ளார்கள். இருப்பினும் இந்த மறுசீரமைப்பு கொண்ட டலஸ் இன்னும் இந்த அரசாங்கத்தின் உள்ளே இருக்கின்றார். 

போராட்டத்திற்கு வருகை தந்து போராட்டக்காரர்களுக்காக பாடல் பாடிய பிரதீபாவினுடைய கணவர் இன்னும் இந்த அரசாங்கத்தோடு சேர்ந்து இருக்கிறார். தற்பொழுது டலஸ் அல்லது பிரதீபா கூறுவார்கள எங்களது அரசியல் நிலையை குடும்பத்துக்குள் நாங்கள் கொண்டு வருவதில்லை என்று.

 இருப்பின் அது ஒரு புதுமையான ஒரு அரசியல் விடயம் அல்லவா. உண்மையில் டலஸ் அரசாங்கத்தின் உள்ளே இன்னும் சேர்ந்து இருப்பது தொடர்பில் அவர் வெட்கப்படவேண்டும். தற்பொழுது ரட்டே ரால நேரடியாக கேள்வி தொடுக்கக்கூடியதாக இருக்கும்.அடுத்ததாக ராஜபக்சக்களை விரட்டியடித்த நிலைப்பாட்டிற்கு பின் ஏற்படுத்தப்படுகின்ற இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் டலஸ் என்றால் ரட்டே ராலவுக்கு எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது.

ரட்டே ராலவின் கருத்து என்னவென்றால் அது எதிர்க்கட்சிக்கு வந்தால் சிறப்பாக அமையும். இருப்பினும் பெரும்பான்மை இருப்பது யாருக்கு என்கின்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அந்த விடயம் தீர்மானிக்கப்படும். இருப்பினும் ரட்டே ராலவுக்கு டலஸ் தொடர்பில் இருப்பது மூன்று கேள்விகள் உண்டு. அந்த கேள்விகளுக்கு ரட்டே ரால டலஸிடம் பதில் கேட்பது கிடையாது. 

முடியுமாக இருந்தால் அவ்வாறு இல்லையென்று பாவனையில் நிரூபித்து காட்டுங்கள் என்று டலசுக்கு சவால் விடுகின்றார். ரட்டே ரால குறிப்பிடுவது ராஜபக்ஷ ரெஜிமேன்டுக்கு இறுதி ஆணி அடிப்பதற்கு தற்போது தடையாக இருப்பது டலஸ்.டலசுடன் இந்த சந்தர்ப்பத்தில் மொட்டுவில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் இதனை மேற்கொள்ள முடியும். ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுவதற்கான வாக்கு இருப்பது டலஸிடம்.

டலஸ் அதனை வைத்துக்கொண்டு ராஜபக்ஸ ரெஜிமேன்டை பாதுகாப்பதற்கு இன்னும் முற்படுவார் ஆனால் அவர் மறுசீரமைப்பாளர் என்று எவ்வாறு குறிப்பிடுவது? மறுசீரமைப்பாளர்கள் தேசத் துரோகிகளை பாதுகாக்க முடியுமா?டலசிற்கு மறுசீரமைப்பாளர் என்ற லேபளை இன்னும் தக்க வைக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. பிரதீபா போராட்ட பூமிக்கு வருகை தந்து பாடல் பாடியதற்கு நியாயத்தை சந்தர்ப்பம் உள்ளது. 

இல்லை என்றால் விருப்பம் இல்லாவிட்டாலும் இதற்கு டலஸை இத்தீர்மானத்திற்கு கொண்டு வர ரட்டே ராலவுக்கு நிலைமை ஏற்படும். முதலாவது தான் டலஸ் சவால்களுக்கு பயந்தவர் என்பது. அவ்வாறெனில் உண்மையில் டலஸ் என்பவர் ஊடகங்கள் மூலமாக ஊதப்பட்ட ஒரு பலூன் போன்ற ஒருவர் தான்.

டலஸ் சவால்களுக்கு பயப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றது என்று ரட்டே ரால குறிப்பிடுகின்றார். ஒன்றுதான் ராஜபக்ஷவுக்கு எதிராக செயல்படுகின்ற எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சரி இந்த வேலை பிழைத்துவிட்டால் ராஜபக்சக்களின் பதலடியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பயமும். 

அதற்கு முகம் கொடுப்பதற்கு அளவுக்கு தைரியம் அவரிடம் இல்லாமல் இருக்கின்றது. அதற்கு பயப்படுகிறார். ஏனென்றால் அவ்வாறான விடயங்களை அனுபவிக்காவிடினும் அனுபவத்தில் கண்டு இருக்கின்றார். பொறுத்திருந்து பார்ப்போம் டலஸ் தெரிவு செய்வது எது என்று. 

அவ்வாறாயின் போய் வருகின்றேன்

கடவுள் துணை

 வெற்றி கிட்டட்டும் 

இப்படிக்கு ரட்டே ரால,

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி