இரண்டாவது ராஜபக்சக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இது தொடர்பான செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர்களை பொலிஸார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இரண்டாவது ராஜபக்சக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இது தொடர்பான செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர்களை பொலிஸார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனப்படும் குழுவொன்று மட்டக்களப்பில் உள்ள இரண்டு சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

GoHomeGota போராட்டம் தொடர்பான தகவல்களையும் கருத்துக்களையும் முகநூலில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளித்து நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக மட்டக்களப்பு ஊடகக் கழகத்தின் தலைவர் எஸ்.நிலாந்தன் மற்றும் புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோர் பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

அச்சமடைந்த உறவினர்கள், இருவரின் இருப்பிடம் தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நாளாந்தம் செய்தியாக்கி, அவற்றிற்குத் தீவிரமாகப் பங்களிக்கும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களுக்கு எதிராக பொலிஸாரால் இவ்வாறான துன்புறுத்தல்கள் எதுவும் மேற்கொண்டதாக இதுவரை செய்திகள் வெளியாக வில்லை.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி