எந்த காரணத்திற்காகவோ அல்லது எந்த அழுத்தங்கள் காரணமாகவோ நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின்

தாமரை மொட்டு சின்னத்தை மாற்றப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தன தெரிவித்தார். பெசில்வாதியாக அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறினார்.

“எந்தவிதமான காரணங்களுக்காகவும் தாமரை மொட்டு சின்னத்தை மாற்றுவதற்கு நாம் தயாரில்லை. தாமரை மொட்டு எனப்பவடுவது இந்நாட்டு மக்களால் வெற்றி பெறவைக்கும் ஒரு சின்னமாகும்.  எனவே எந்தவிதமான அழுத்தங்கள் வந்தாலும், எந்தவிதமான நிலைமைகள் ஏற்பட்டாலும் தாமரை மொட்டு சின்னத்தை மாற்றுவதற்கு நாம் இடமளிக்கப் போதில்லை” எனவும் அவர் இதன் போது கூறினார்.

அண்மையில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாரி ஜயசேகரம அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண ஆகிய இருண்டு கட்சிகளும் இணைவதாயின் கண்டிப்பாக பொது சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக தீர்மானதிதை ஏற்படுக் கொள்ள வேவண்டும். அவ்வாறில்லாவிட்டால் மாற்று வழிகளை எடுப்பதற்கு நேரிடும் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாரிசிரி ஜயசேகர சுட்டிக் காட்டினார்.


ஸ்ரீ.ல.சு.கட்சி இல்லாவிட்டாலும் நாம் வெற்றி பெறுவோம் - ஷெஹான்

இதனிடையே தாமரை மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க கருத்து தெரிவித்த போது, ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடும் சின்னம் தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என பெசிலுக்கு எதிரானவராகக் கருதப்படும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக இதுவரையில் 8 சந்தர்ப்பங்களில் இரு கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தற்போதைய பொருளாலரும் பாராளுமன்ற உறுப்பினருமான லசந்த அழகியவன்ன குறிப்பிடும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சிகளுக்கிடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் அதற்கு மாற்றீடாக ஸ்ரீ.ல.சு.கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி