கோத்தாவின் உத்தரவிலேயே தடை செய்யப்பட்ட்  ஆயுதங்களை  பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினர். இதனாலேயே பலமாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை

இலங்கை இராணுவம் வெற்றி கொண்டது.

இப்போது  மக்கள் மத்தியில் கனரக ஆயுதங்களை பாவிக்கவில்லை என பொய்யுரைத்து வருகின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய மாநாடு கடந்த சில தினத்துக்கு முன்னர் கொழும்பு கிங்ஸ்பெரி கோடடலில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய இறுதி யுத்தத்தில் நாம் கனரக ஆயுதங்களை பாவிக்கவில்லை அதனால் தான் மக்கள் பாதுகாக்கப்பட்ட்துடன் இராணுவத்தினர் அதிகம் இறந்தனர் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில்   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரில் கனரக ஆயுதங்கள் எவையும் பாதிக்கப்படவில்லை.அதனால்தான் போரில் அதிக இராணுவத்தினர் இறந்ததுடன் பொதுமக்கள் குறைந்தளவிலேயே இறந்தனர் என கூறியுளளார்.

இது  முழுக்க முழுக்க அப்படடமான பொய்யாகும்.இறுதிப் போரில் மட்டுமல்ல போர் ஆரம்பிக்கப்படட காலத்தில் இருந்தே இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பாவித்து வந்தது.வடக்கு பகுதியின் மன்னார் மாவடடத்தில் ஆரம்பிக்கப்படட யுத்தத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரை தடை செய்யப்பட்ட் ஆயுதங்களையும் கனரக ஆயுதங்களையும் இலங்கை பாதுகாப்பு படையினர் உபயோகித்தனர்.இதனாலேயே பலமாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் வெற்றி கொண்டது.

உள்நாட்டு போரில் இலங்கை படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தவில்லை.அப்பாவி பொது மக்கள் மீதும் கொடூரமான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படடன.இதனால் ஏராளமான மக்கள் துடி துடித்து இறந்தனர்.இவற்றுக்கு எல்லாம் உத்தரவிடடவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே.இதனை இலங்கையில் மட்டுமல்ல உலகமும் அறியும்.போர் பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்திருந்த மத தலங்கள்,வைத்தியசாலைகள்,பொது இடங்கள் என அனைத்தும் திடடமிட்டு இலக்குகள் வைக்கப்பட்டு தாக்குதல்கள் இடம்பெற்றன.

மாத்தளன்,பொக்கணை,முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு தேடி ஒதுங்கி இருந்த இடங்கள் மீது தடைசெய்யப்பட்ட் பொத்துக் குண்டுகள்,இரசாயன குண்டுகள் வீசப்படடன.இவற்றுக்கெல்லாம் உத்தரவிட்ட்து யார்?இப்போது மக்கள் முன்னிலையில் பொய்களை கூறிவரும் இதே கோத்தபாயவே  உத்தரவிடடார்.உள்நாட்டு போரை வழி நடத்திய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய யுத்த விதிகளை மீறியே போரை நடனத்தினார்.தடை செய்யப்பட்ட் ஆயுதங்கள்,கனரக ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்து  வன்னி மண்ணில் குண்டு மழைகளை பொழிந்தனர்.இதனாலேயே விடுதலைப் புலிகளை அவர்களால் வெல்ல முடிந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னரும் இலங்கை படையினர் இடைவிடாத தாக்குதல்களை மேற்கொண்டனர்.புலிகளை மட்டுமல்லாது மக்களையும் அதில் கொன்று குவித்தனர்.நாட்டில் இடம்பெற்ற யுத்தம் புலிகளை அழிக்க வேண்டும் என்று நடத்தப்படவில்லை தமிழ் மக்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற ஓர்மத்திலேயே நடைபெற்றது. இதற்கெல்லாம் உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு இப்போது தேர்தலில் இறங்கியவுடன் பொய்களை கூறிவருகின்றார்.எனினும் மக்கள் இவரை பற்றி அறிந்து வைத்துளளர்கள்.இவர்களின் உண்மை முகம் வெளிக் கொண்டு வரப்பட வேண்டுமானால் சர்வதேச விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி