ஏப்ரல் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்னும் முன்நோக்கி கொண்டு செல்கின்றது. இன்னும் இந்தப் போராட்டம் பின்நோக்கி திரும்பவில்லை.Gota Go home என்ற அந்த ஸ்லோகன் தற்போது எல்லோரும் எடுத்துள்ளார்கள்.
போராட்டக்காரர்கள் மாத்திரமல்ல. எரிபொருள் நிரப்பு வரிசையிலே, எரிவாயு வரிசையிலே அந்த விடயம் வந்துள்ளது. தற்போது மருந்து தட்டுப்பாடு உள்ள இடங்களிலும் Gota Go home என்று குறிப்பிடுகின்றார்கள். அரச நிறுவனங்களிலும் கேட்கக் கூடியது Gota Go home என்பதுதான்.
எவ்வாறு இருப்பினும் கோட்டாபய வீடு செல்வதற்கு தயாராக இல்லை என்பதை ஜோன்ஸ்டன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். உண்மையில் அதுதான் உண்மை.யார் தான் அதிகாரத்தை கைவிடுவதற்கு விருப்பம். விசேஷமாக ராஜபக்சக்கள் அதற்கு ஒருபோதும் விருப்பப்படுவதே கிடையாது. 
 
இருப்பினும் ஒரு விடயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மக்களுடைய போராட்டத்திற்கு முன் அதனை விட பெரும் தலைவர்கள் வீட்டுக்கு அனுப்பபட்டுள்ளார்கள். உண்மையில் இதுவரை நாட்டு மக்கள் தங்களது பொறுப்பை மேற்கொண்டு முடித்து விட்டார்கள். 
 
மக்கள் முன்வந்து ராஜபக்சக்களமு எதேச்சதிகாரத்தை சமநிலைக்கு உட்படுத்தி விட்டார்கள். இன்று எந்த ஒரு ராஜபக்சவிற்கும் அவருடைய சகாக்களும் வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையை பதவி விலகச் செய்து உள்ளார்கள். 
 
அரசாங்கத்தை வழங்க தயார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். உண்மையில் மக்கள் சரியான முறையில் பந்தை ராஜபக்ச முகாமுக்கு அனுப்பியுள்ளனர். மக்கள் போராட்டத்திற்கு முன்னர் பயந்த ராஜபக்சக்கள் மீண்டும் அதனை கட்டியெழுப்ப முனைவதனை மேற்கொள்வது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
 
ராஜபக்சக்கள் தங்களுடைய பக்கத்திற்கு மக்கள் அனுப்பிய அந்தப் பந்தை எதிர்க்கட்சி பக்கத்துக்கு அவர்கள் அனுப்பி விட்டு இருக்கின்றார்கள். தற்பொழுது பந்து இருப்பது எதிர்கட்சி பக்கத்தில்.பொய் இருமாப்பு கதைகளை பேசுகின்ற கட்சியினுடைய கையில்.தாம் அபூர்வமானவரை விட கூடிய ஒரு நபர் என்று குறிப்பிடுகின்ற சஜித்திடம். எந்த ஒரு பிரச்சினைக்கும் தன்னிடம் பதில் கிடைக்கும் என்று கூறப்படுகின்ற அனுர திசாநாயக்க உள்ள எதிர்கட்சி பக்கத்தில். இந்த போராட்டத்திற்கு தீர்வொன்று இருப்பதாக தென்படவில்லை.
 
 போராட்டத்திற்கு சமாந்தரமாக அவ்வாறான ஒரு செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் விளங்கவில்லை. தற்பொழுது போராட்டத்திற்கு முன்னால சென்றால் அவதான நிலையோடு தான் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
 ஏனென்றால் அந்த போராட்டத்திற்கு தலை இல்லை. இன்னும் ஒரு சில நாட்களில் போராட்டக்காரர்கள் அப்போராட்டத்தை இழுத்துக் கொண்டு செல்ல முடியாது. இருப்பினும் தற்போது நோக்குகின்றபோது போராட்டக்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். 
அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒற்றுமை இன்னும் எதிர்கட்சி அணிகளுக்கிடையில் ஏற்படவில்லை. அவர்கள் இன்னமும் ஒரே நிலைக்கு வரவில்லை. எதிர்க்கட்சியும் போராட்டக்காரர்களை போராட்டத்தை தாரைவார்த்து விட்டது. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் போது இதனை தெளிவாக காணக்கூடியதாக இருந்தது.
அந்த உண்மை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பக்கத்திலிருந்தும் ஏற்பட்டிருந்தது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச போன்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் கேள்விகளிலிருந்து பாய்ந்து சென்ற விடயத்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 
 
அந்த வேதனை விளங்கிய எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய குமுறல் குரல் ஒலித்தது.ஹரீன்,பாட்டலி, மனுச,பொன்சேகா,ஹர்ச, ராசமாணிக்கம் போன்றவர்களது கதையில் இருந்து அது வெளியே வந்தது.சஜிதர போன்று அனுர எதிர்பார்த்திருப்பது கோட்டாபய பதவி விலகிய பின்னர் பதில் தொடர்பில் கதைக்கவாகும். நேற்று அனுர அதனை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
 
கோட்டா விலகிய பின்னர் அது தொடர்பில் கலந்துரையாடுவோம் என. சஜித் குறிப்பிட்டதும் மக்கள் ஆணையை தவிர ஏனைய இடைநிலை செயற்பாடுகளுக்கு விருப்பமில்லை என்று. அவர் குறிப்பிடுகின்ற அடிப்படையில் ஒரே சந்தர்ப்பத்தில் பதவி விலக வேண்டும். அதன் பின்னர்தான் இவர்கள் நடுநிலை வகிக்க முடியும். 
 
அந்த இரு கதைகளிலும் நடைபெறுவது ரெஜிமென்ட் வலுப்படுத்தப்படுவதாகும்.கோட்டாபய விலகவில்லையென்றால் எவ்வாறு விலக்குவது என்பது தொடர்பில் அவர்களிடம் எந்த கருத்தும் இல்லை. கோட்டாபயவை செயலிழக்கச் செய்வது எவ்வாறு என்பது தொடர்பிலும் அவர்களிடம் எந்த விதமான கருத்துக்களும் இல்லை.
 
அதனை செய்வது கோட்டாபயவிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டுமென்ற ஒன்றல்ல. மஹிந்தவிடமிருந்து ஆரம்பித்து கோட்டாபய வரை செல்லக்கூடியதாக இருக்கும். எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் குறிப்பிடுகின்ற கதைகளை கேட்டு விசுவாசம் கொண்டு வந்த வேலையை செய்ய முடியாது. தற்போது எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ளவேண்டும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்று. பெரும்பான்மை எதிர்க்கட்சிக்கு ஏற்படுத்த முடியும். இருப்பினும் அதனை அவர்கள் செய்யவில்லை. 
 
பெரும்பான்மை உண்டு என கூறும் அரசாங்கத்தினுடைய நிலைப்பாட்டுக்கு தற்பொழுது எதிர்க்கட்சி கீழ்படிந்துள்ளது. அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருந்தால் அரசாங்கம் அவசரகால சட்டத்தை நிறைவேற்றியிருக்கும். உண்மையில் அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய சில அணியினர் இருப்பது உறுதியான நிலைப்பாட்டில் அல்ல. அவர்களுக்கு உரிய தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு எதிர்க்கட்சி ஒரு நிலைப்பாட்டுக்கு வரவில்லை. 
 
அதனால் அரசாங்கமும் அங்கும் இங்கும தளம்பல் ஆடுகின்றது. அரசாங்கம் எதிர்க்கட்சி இரண்டு பக்கமும் பந்தை அங்குமிங்குமாக மாற்றி மாற்றி இருக்கின்றார்களே ஒழிய இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்கப் பெறவில்லை. உண்மையில் மக்களுக்கு தற்பொழுது அரசாங்கத்தை போல் எதிர்க் கட்சியும் எந்தவித பிரயோசனமுமற்றது. தற்பொழுது அவசியம் அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆகும்.
 
அதனை செய்வதற்கு பாராளுமன்றத்திற்கு முடியாது எனில் 225 பேரும் பெய்ல் என்ற கருத்து உறுதிப்படுத்தபடுவதை நிறுத்த முடியாது. அதனால் எதிர்க்கட்சி தற்பொழுது போராடவேண்டும் தேவையான இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கி இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு. அதற்கு எதிர்க்கட்சிகள் இடையில் பொது உடன்பாடு ஏற்படுத்தப்படல் இன்றியமையாத்து.
அதே போன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கக் கூடிய சந்தர்ப்பத்தை மூடிக்கொள்ள வேண்டும்.ரட்டே ரால நினைக்கவில்லை தற்போது பாராளுமன்றத்தை ஒத்தி வைக்குமளவுக்கு ஜனாதிபதிக்கு தைரியம் உள்ளது என்று. இடைக்கால அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்படுகின்ற பிரதமருக்கு அமைச்சரவையை முன்மொழியக்கூடியதாக இருக்கும். 
 
அதற்கு முடியும் 21ஆம் திகதி திருத்தத்தை கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதற்கு. அந்த அமைச்சரவைக்கு முடியும் பாராளுமன்றத்தில் புதிய வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு. நாட்டில் இந்த சந்தர்ப்பத்தில் தேவையான பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கவசியமான வரவு செலவுத்திட்டத்தை கொண்டுவர. சர்வதேச ரீதியாக ஒத்துழைப்புக்களை கேட்பதற்கு. 
 
இவை அனைத்தையும் செய்ய முடிவது போராட்டம் பாராளுமன்றத்தின் உள்ளேயும் அதுபோன்று வெளியே இருக்கும்போது மாத்திரம்தான். எதிர்கட்சி இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டியது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தங்களுடைய பக்கத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வதே ஆகும்.
 
அதுதான் மேற்கொள்ளக்கூடிய எளிதான வழியாகும். அந்த இடத்தில் ஆரம்பிக்கப்படவேண்டும். இருப்பினும் இந்த சவாலை பொறுப்பேற்பதற்கு சஜித்திற்கு பயமாக இருக்கின்றது. வேறொருவருக்கும் அதனை வழங்குவது கிடையாது. நாய் வைக்கோலை சாப்பிடுவது இல்லை போன்று சாப்பிடக்கூடிய மாட்டுக்கு வழங்குவதுமில்லை.ஹரீன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டது அதனையே.அதனை சஜித்திற்கு செய்ய முடியாதெனின் செய்யக்கூடியவருக்கு அதனை வழங்க வேண்டும். ரணிலிடம் மாத்திரம்தான் எதிர்க்கட்சி பக்கத்தில் ஒரு சரியான முன்மொழி ஒன்று காணப்படுகின்றது. உண்மையில் சஜித் அதற்கு பயம். 
 
எடுத்தும் அதனை செய்வதற்கு முடியாது.சஜித்திற்கு தெரியும் தனக்கு அதனை செய்ய முடியாது என்று. இந்த இடத்தில் தற்போது ஒருவிடயம் தெளிவாக இருக்கின்றது.கோட்டாபயவிற்கு பதிலாக சஜித்தோ அனுரவோ இந்த இடத்தில் ஏற்புடையதாக்குவது பதிலன்று. 
 
யாரையும் ஏற்புடையதாக்கி பயன் கிடையாது எந்த ஒரு வேலை திட்டமும் இல்லாமல்.சஜித்,அனுரவிடம் இருக்கக் கூடிய வேலை திட்டம் இந்த பிரச்சினைக்கு பதிலாக அமையாது. உண்மையில் இதற்குரிய பதிலாக அமைவது தலைமைத்துவத்தின் தலைகளை மாற்றிமாற்றி இருப்பதல்ல. அரசியல் பொருளாதார ரீதியாக மேற்கொள்ளக்கூடிய மறுசீரமைப்பு தான் இதற்கான பதிலாகும்.
 
இப்போராட்டத்தின் உள்ளேயே அந்த கருத்தாடல் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த இடத்தில் இருக்கக் கூடிய சிறந்த விடயம் தான் கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று ஏற்றுக்கொண்டு இந்த பிரச்சனைக்கு பதில் தேடுவதற்காக ஏற்பட்டுள்ள அறிஞர் க கருத்தாடல் ஆகும்.ரட்டே ரால அறிஞர்கள் என்று குறிப்பிடுவது கோட்டாபயவை கொண்டு வருவதற்காக பின்னால் சென்று, பிழைத்த பின்னர் கோட்டாபயவை தாக்கி புள்ளிகளை பெற்று அடுத்த பக்கத்தில் இருந்து கொண்டு இருக்கக் கூடியவர்கள் அல்ல என்பதுதான். 
 
உண்மையில் இந்த நாட்டை எவ்வாறு கட்டி எழுப்புவது என்பது தொடர்பில் அந்தந்த துறைகளில் பரீட்சயம் உள்ள நிபுணர்கள் மத்தியில் கருத்தாடல் ஏற்பட்டிருக்கின்றது. தற்போது இந்த பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு அவருடைய ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த கருத்தாடலை கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது சிறப்பாக அமையாது.
 
தற்போது அரசியல்வாதிகளை மாற்றுவது போன்று அரச பொறிமுறையையும் மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டும்.ரட்டே ரால குறிப்பிடுவது இந்த விடயங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை அரச பொறிமுறை வியூகத்தில் உட்படுத்த வேண்டும். அவர்கள் மூலமாக பாராளுமன்ற குழு நிலையை வலுப்படுத்த வேண்டும். அதற்காக புதிய வியூகம் ஒன்றை நிர்மாணித்தல் வேண்டும்.
 
உதாரணமாக நாங்கள் பார்த்தால் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ராலை நீக்கி நந்தலால் வீரசிங்கவை நியமித்திருப்பது நல்லதொரு மாற்றமாகும். உண்மையில் கப்ராலை மத்திய வங்கி ஆளுநர் அல்ல அவர் சரியெனில் சிறைக்கூட்டிலே இருக்க வேண்டும். இருப்பினும் நந்தலாலுக்கு கபுடாஸ்க்கள் எந்தளவு தூரம் செய்வதற்கு விடுவார்கள் என்று தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்குவதற்கு புதிய மூன்றுபேர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த இடத்திலும் சிறந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். 
 
இன்னும் பல நபர்கள் இருக்கின்றார்கள் இந்த பொறிமுறைக்கு உள்வாங்குவதற்கு. அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்சக்களை விரட்டி அடிப்பது போன்று ராஜபக்சக்கள் அரச பொறிமுறையை வழிநடத்துவதற்கு நியமிக்கப்பட்ட அந்தக் அவர்களையும் விரட்டியடிக்க வேண்டும். கப்ரால், காமினி செனரத், ஆட்டிகல போன்றவர்கள் இந்த அழிவின் பங்குதாரர்கள். 
 
அதே போன்று இன்னும் பலர் இருக்கின்றார்கள். அதனால் இந்த உயர் நிலையில் இருக்கக்கூடிய அரச சேவையை மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டும். அந்த துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களது நாட்டை கட்டியெழுப்பும் முன்மொழிவுகளுக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
 
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த வேலைத் திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு சென்றால் இந்த நாடு அழிவுப் பாதைக்கு செல்வதை நாங்கள் தடுக்கக் கூடியதாக இருக்கும். இல்லையென்றால் மே ,ஜூன் மாதம் வருகின்ற போது இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாத ஒரு நிலை ஏற்படும். 
 
அதுதான் செய்யக்கூடிய விடயமாகும். அதற்காக ராஜபக்சக்களை விரட்டி அடிப்பதோடு பொருத்தமான இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துதல் இவர்களுடைய பொறுப்பாகும். அந்த பொறுப்பிலிருந்து விலகிசெல்வதற்கு சஜித், மைத்திரி, ரணில், அனுரவுகும் முடியாது. அதிலிருந்து விலகிசெல்வதாக இருந்தால் இன்னும் அவர்கள் சேவை செய்வது ராஜபக்ஷக்களுக்கேதான்.
 
அவ்வாறாயின் போய் வருகின்றேன்
கடவுள் துணை வெற்றி கிட்டட்டும்
இப்படிக்கு
ரட்டே ரால
 
 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி