உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் நியாயம் கோரி இன்று (9)  நீர்கொழும்பு - கட்டுவபிட்டி தேவாலயத்திலிருந்து  பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலை 6.30 மணிக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் ஒன்றான கட்டுவாபிட்டிய தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி 36 கிலோ மீற்றர்கள் பயணத்தின் பின்னர்,   தாக்குதல்கள் இடம்பெற்ற மற்றொரு தேவாலயமான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை பி.ப. 2.30 மணியளவில் வந்தடையவுள்ளது. 

Image

அதன் பின்னர் கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயத்தில் பி.ப. 3.00 மணிக்கு விஷேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

காலை 6.00 மணிக்கு பேரணி ஆரம்பிக்க முன்னர், கட்டுவாபிட்டி தேவாலய தற்கொலை தாக்குதல்களில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களது அடக்கஸ்தலங்களில் விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ள நிலையில் அதன் பின்னரேயே தேவாலயத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளடு.

Image

இந்த நடை பேரணியானது ' நியாயத்துக்கான பேரணி ' என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி