இதுவரை பசில் ராஜபக்சவின் ஏகபோகத்தின் கீழ் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பதவியை நாமல் ராஜபக்ச கைப்பற்றியுள்ளார்.

நாட்டில் எழுச்சி பெறும் இளைஞர் படைக்கு முகங்கொடுக்கும் வகையில் மொட்டுக்களை முற்றாக மறுசீரமைக்கும் பணி நாமல் ராஜபக்சவுக்கு உள்ளது.

இடைக்கால அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் சில மாதங்களுக்குள் மொட்டு கட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மொட்டு கட்சியின் தலைவராக இருந்த போதிலும், அவருக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. 

அதேபோன்று நாமல் ராஜபக்சவுக்கு இதுவரை எந்த பதவியும் பொறுப்பும் வழங்கப்படவில்லை என்பதுடன் அந்த கட்சிகள் முழுமையாக பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான தனியார் நிறுவனமாகவே செயற்பட்டன.ஏறக்குறைய அனைத்து பொஹொட்டு கட்சி பொறுப்பாளர்களும் பசில் ராஜபக்ச ஆதரவாளர்களாவர்.

 ஜனாதிபதிக்கு கூட எந்தவொரு பதவியும் வகிக்கப்படவில்லை.எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் பசில் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பொஹொட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை நாமல் ராஜபக்சவிடம் வழங்க ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். 

அவர் இன்று காலை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மொட்டு கட்சி அலுவலகத்திற்குச் சென்று பணிகளை ஆரம்பித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உடனடியாக கட்சி தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை வரவழைத்து நெருக்கடியை சமாளிக்க கட்சியை ஒழுங்கமைக்க ஆரம்பித்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி