சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின அமைப்பு தொடர்பில் ரட்டே ராலவுக்கு அவ்வளவு தெளிவில்லை. இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடக்கம் முதன் நிலை தலைவர்கள் அதில் இருப்பார்கள்.

தெரியாதவர்களும் அந்த இடத்தில் இருக்கக் கூடும். எவ்வாறு இருந்த போதிலும் மத்திய குழுவிற்கு இருக்கக்கூடிய பொறுப்பு மற்றும் அரசியல் அதிகாரம் தொடர்பில் ரட்டே ராலவுக்கு போதிய தெளிவு காணப்படுகின்றது.

கட்சி சம்மேளனங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படுகின்ற தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் இருப்பது மத்திய குழுவுக்கு. மத்திய குழுவில் கட்சியினுடைய அனைத்து அமைப்புக்களும் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். அரசியல் சபை போன்று நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முடியுமாக இருப்பது மத்திய குழுவுக்கு ஆகும். அரசியல் சபை மத்திய குழுவில் மிக உயர்ந்த ஒரு நிறுவனமாக காணப்பட்ட போதிலும் அரசியல் சபை மேற்கொள்கின்ற தீர்மானம் மத்திய குழுவின் உடைய அனுமதியை பெற்றுக் கொள்ளல் வேண்டும். முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்கள் முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது ஜனநாயகம் புதைக்கப்பட முக்கிய மூலகாரணமாக இருப்பது கட்சியின் உள்ளே இருக்கக்கூடிய உள்ளக ஜனநாயகம் இல்லாமல் இருப்பதாகும். இருப்பினும் அதனுடைய அடுத்த பக்கம் அதாவது பொறுப்பில்லாத ஜனநாயகத்தினால் எந்த பலனும் இல்லை. ஏனென்றால் ஜனநாயகம் என்று யாருக்கும் கட்சியின் உள்ளே நீடிக்க முடியாது.

அதற்கு அதிகமான கட்சிகளிடம் இருப்பது மத்தியமயப்படுத்தப்பட்ட ஜனநாயகம் ஆகும். எவ்வாறு இருந்த போதிலும் மஹிந்த தேசப்பிரிய அவர்கள் குறிப்பிட்ட கதையானது முற்றிலும் உண்மையானது. அந்த ஒவ்வொரு கட்சிகளின் இடையே உள்ளக ரீதியான ஜனநாயகம் இருப்பது மிகக் குறைவாகும். அது ஒரு தனி நபரினதோ, அல்லது பலரினதோ ஆட்சி அதிகாரத்திற்கு கீழ் பட்டிருக்கின்றது. அந்த கதையை இவ்வாறு குறிப்பிட்டது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கதை இதனுடன் தொடர்புபடுவதினாலாகும். எவ்வாறு இருப்பினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பது பொது ஜன பெரமுனவின் உள்ளே இருக்கக்கூடிய இரண்டாவது பெரிய கட்சியாகும். அதே போன்று சிறிய கட்சி கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சியாகும். அதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உடைய தாய் கட்சியாகும். இன்னும் இந்த நாட்டிலேயே இருக்கக்கூடிய சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அந்த கட்சியில் இருக்கிறார்கள். இருப்பினும் கடந்த இரண்டு வருடங்களிலும் அவர்கள் அரசாங்கத்துடனேயே இருநரதார்கள். இன்னும் அரசாங்கத்தின் உள்ளேயே. அதேபோன்று கடந்த இரண்டு வருடங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் உள்ளே இருந்து குறிப்பிட்ட விடயங்களானது கவலைக்குரிய விடயங்கள் தொடர்பானதே.

பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டது தொடக்கம் அடுத்ததாக பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் அவர்கள் அந்த கவலைகளை சொல்வதைக் கேட்கக் கூடியதாக இருந்தது. ஜனாதிபதி நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களோடு மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் யாவும் தற்போது மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது நாங்கள் அல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர். அவர்கள் வழங்குவதாக குறிப்பிட்ட பங்குகளை வழங்கவில்லை என்று குறிப்பிட்டதும் அவர்களே. அந்த அடிப்படையில் வேட்பாளர், அமைச்சர் பதவி, பிரதி அமைச்சர், பதவி தேசிய பட்டியல் உறுப்பினர் என்ற வேறுபாடு காணப்படவில்லை. அடுத்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி வேலைகளில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது இல்லையாம். அதனோடு ஒன்றை வைத்துக் கொண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சு வேண்டாத ஒரு அமைச்சு என்று குறிப்பிட்டது தயாசிரி ஆவார். அவ்வாறு குறிப்பிடுகின்ற அதேசமயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு கையை உயர்த்திய து. அண்மையில் இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்வாக இருக்கக்கூடியது 20வது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 பேரில் 13 பேர் ஒத்துழைப்பு வழங்கியமையே ஆகும்.

அந்த பாவச் செயலுக்கு சம்பந்தப்படாதவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரி மாத்திரமே. இருப்பினும் அந்த பாவத்திற்கு தன்னுடைய கட்சி செல்வதிலிருந்து விடுவிப்பதற்கு அவருக்கு முடியாமல் போனது. அடுத்ததாக இருப்பவர்கள் அனைவரும் 19க்கும் கையை உயர்த்தினார்கள். தங்களுடைய கட்சியினுடைய கொள்கை அடிப்படையில் அதனை ஸ்தாபிப்பதற்கு இருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் 19 ஆவது திருத்தத்திற்கு காலால் உதைந்து 20க்கு அவர்கள் கையை உயர்த்தினார்கள். அந்த பாவச்செயலிலிருந்து அவர்கள் ஒருபோதும் விடுபடமுடியாது.அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் உள்ளனர்.உண்மையில் இன்றுள்ள எதேச்சதிகாரமாக இருப்பது 20 வதுதான்.அதனால் ஜனாதிபதிக்கு சர்வதிகாரம் கிடைக்கின்றது.அதன் மூலம் பாராளுமன்றம் வந்த அசிங்கமான அமெரிக்க எதிரிக்கு முழுநாட்டையும் கீழ்ப்படுத்தியுள்ளனர்.நாட்டின் அனைத்துக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எல்லா வழிகளிலும் நாடு அபாயகர நிலையிலேயே.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.மக்கள் எதிர்நிலையில். உண்மையில் ஒரு குறிப்பிட்ட காலம் மீள முடியாதவாறு கடந்த இரண்டு வருடங்களும் நாடு குட்டி சுவராக்கப்பட்டுள்ளது. ரட்டே ரால சிறிலங்கா சுதந்திர கட்சியிடம் கேட்பது இவ்வளவுதான். கடந்ந இரண்டு வருடமும் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கட்சி என்றடிப்படையில் பெற்றுக்கொண்ட சாதகங்கள் என்ன?சிறிலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களுக்கு நடந்த நல்லதொன்றை சொல்லுங்கள். மக்களுக்கு நடந்த நல்ல ஒரு விடயத்தை சொல்லுங்கள். ஒரு சிலருக்கு வரப்பிரசாதங்கள் கிடைத்ததே ஒழிய சிறிலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்களுக்கு எவ்வித நலனும் கிடைக்கவில்லை. இடதுசாரிகளின் இதயமாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி குறிப்பிடப்படாமல் இருந்தாலும் இடதுசாரிகளின் தங்குமிடமாக அக்கட்சி அமையப்பெற்றுள்ளது. முழுமையான இடதுசாரி தன்மையற்றதாயினும் இடதுசாரி மறுசீரமைப்பைகொண்ட முதலாளித்துவ கட்சியாக சிறிலங்கா சுதந்திர கட்சி உள்ளது. அதேபோன்று இடதுக்கும் தெற்குக்கும் இடையே இந்நாட்டுக்கு நடுநிலைத்தன்மையை சொல்லிக்கொடுத்த கட்சியே இக்கட்சி ஆகும்.

இருப்பினும் இன்று அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர்களும் தீவிர வலதுசாரி, அடிமைமுறை ராஜபக்ச நிர்வாகத்தின் அல்லக்கைகளாக மாறியுள்ளார்கள். அவருடைய நிர்வாகத்தின் கீழ்படிந்து ராஜபக்சக்கள் முன்னே மண்டி இடுகின்ற நிலைக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். அடிமைமுறை சிந்தனைக்கு முன்னால் சிறிலங்கா சுதந்திர கட்சி இடதுசாரி மறுசீரமைப்பு சிந்தனையை மண்டியிடச்செய்துள்ளது. உண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கேட்க வேண்டியது உங்களுக்கு வெட்கம் இல்லையா என்று. ரட்டே ரால இவ்வாக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார் கட்சியினுடைய உள்ள ஜனநாயகம் தொடர்பில். அதிகமான கட்சிகளிடத்தில் இதனை காண முடியவில்லை. அதே போன்று மிகவும் கவலைக்குரிய விடயமாக இருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளேயும் அந்த விடயம் இல்லை. இருப்பினும் ரட்டே ரால ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனநாயகத் தன்மை கொண்டது அல்ல என்று குறிப்பிடுவது கிடையாது. உண்மையில் மைத்திரியை ஒரு ஜனநாயகவாதி.ரட்டே ரால அந்த குற்றச்சாட்டை மேற்கொள்வது தனிநபருக்கு அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவுக்கு. அதற்கு காரணம் இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடுகின்ற கதைதான் கட்சியின் மத்திய குழு தீர்மானத்துக்கு ஏற்ப இந்த அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்று.

அப்போது வருகின்ற ஒரு பிரச்சினை தான் அரசாங்கத்திலிருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு இன்னமும் தீர்மானத்தை எடுக்கவில்லையா என்பது. அந்தக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தால் விலகுவோம் என்று குறிப்பிடுகின்ற அவர்கள்தான் மத்திய குழுவில் உள்ளார்கள். வெளியில் ஒரு காரணத்தை குறிப்பிட்டு மத்திய குழுவுக்கு சென்று விலகாமல் இருக்கின்ற தீர்மானத்தை அவர்கள்தான் மேற்கொள்கின்றார்கள். அவ்வாறாயின் அதற்கு நியாயமான ஒரு காரணம் ஒன்றை குறிப்பிட வேண்டும். நியாயமான காரணம் அவர்களுக்கு கிடையாது. தங்களுடைய கட்சிக்கு இவ்வாறு தாக்குகின்ற சந்தர்ப்பத்தில் அங்கத்தவர்களுக்கு தாக்குகின்ற சந்தர்ப்பத்தில் நாட்டை அழிக்கின்ற சந்தர்ப்பத்தில் மக்களை உயிர் போகாவண்ணம் சாகுபடி செய்கின்றபோது இவ்வாறு இருக்க முடியுமா? உண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் குறிப்பிடுவது உடனடியாக இந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்கள் அதிகமானோர் அதனையே குறிப்பிடுகின்றனர்.அவ்வாறாயின் கட்சியின் பெரும்பான்மையான கருத்துக்கு மாற்றமான தீர்மானமொன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவால் எவ்வாறு வருவது.அதுதான் ரட்டே ரால குறிப்பிடுவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானது மத்தியகுழுவை பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை என்று.

அங்குதான் ஜனநாயகம் இல்லை. உண்மையில் மக்கள் அழுத்தத்துக்கு மத்தியில் உள்ளபோது ராஜபக்ச குடும்ப ஆட்சியில் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தார்மீக உரிமைய கிடையாது. சரி முதலாவது சந்தர்ப்பத்தில் அவர்கள் ஏமாந்தார்கள் என்று குறிப்பிடுவோம். அது தொடர்பில் அவர்களே நாட்டிற்கு குறிப்பிட்டார்கள். ஏன் அவ்வாறு அவர்களோடு சேர்ந்து இருப்பது. ஏன் அந்த தவறை சரி செய்யாமல் இருப்பது. மீண்டும் இந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு இருப்பார்களாயின் மக்கள்படும் துன்பங்களுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூறல் வேண்டும். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட முடியும் சர்வகட்சி மாநாடு அரசாங்கத்தினால் நடாத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்காக ஒரு சில நாட்கள் பொறுத்திருப்போம் என்று குறிப்பிடலாம். பரவாயில்லை சில நாட்கள் பொறுத்திருக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு முடியும். சிறிலங்கா சுதந்திர கட்சி குறித்த முன்மொழிவை முன்வைத்தது இயல்பான ஒன்றாக அமையலாம். இருப்பினும் ரட்டே ரால தடைபோன்று உள்ளார் ராஜபக்சக்கள் இதனை பரப்புவதற்குறிய முயற்சிக்கெதிராக. அதுஒரு பெரிய முடிச்சாகும்.ரட்டே ரால ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் இவ்வளவு தொந்தரவு கொடுப்பது ஒரு காரணத்துக்காக. அவ்வாறு அல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எந்த ஒரு எதிர்பார்ப்புக்காகவும் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ரட்டே ராலவுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் அவை யாவற்றையும் நிராகரித்தார். அது சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்திற்கும் தெரியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சர்வ கட்சி மாநாட்டிற்கு போகாமல் இருக்க முடியாது. அதனால் நாளைக்கு அவர்களுக்கு வெளியிலேயே வர முடியாது. இருப்பினும் அவர்களுக்குரிய பொறுப்பாக இருப்பது சர்வகட்சி மாநாடு விடயத்தை சாகுபடி செய்கின்ற ஒரு விதமாக மாற்றாமல் இருக்க. அதற்கான உரிய விடயங்களை அவர்கள் செய்தல் வேண்டும். அந்த முயற்சியை மேற்கொண்டு அவர்கள் வெளியிலேயே வர நினைத்திருந்தால் அவர்கள் அந்த நிலைமையை முகாமை செய்து கொள்ள வேண்டும். மீண்டும் ஏமாந்து கொண்டு வெளியில் வருவது என்றால் அது உண்மையிலேயே ஒரு பிரச்சினையாகும்.ரட்டே ரால குறிப்பிடுவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் காலம் தாழ்த்தி வெளிவருகின்ற விடயத்தை செய்யக்கூடாது என்று. இந்த நாட்டுக்கு தேவையான அரசியல் கருத்தாடலை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உதவி செய்தல் வேண்டும். இந்த நாட்டை கட்டியெழுப்ப தேவையான பொதுவான வேலைத்திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரல் வேண்டும். தற்போதும் ராஜபக்சக்களுடன் கூடியிருப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்ததாக பொது வேலைத் திட்டத்தோடு தேசிய உடன்பாட்டை மேற்கொள்வதற்கு இன்னும் அதற்குரிய சந்தர்ப்பம் திறந்து காணப்படுகின்றது. அந்த கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பாட்டலி, கரு போன்றோர் அதனுள் இருக்கின்றார்கள். ரணிலும் தற்போது தேசிய உடன்பாடு தொடர்பில் கதைத்து கொண்டிருக்கின்றார்.

சஜித் அதனை ஒருபோதும் செய்யமாட்டார். அனுர திசாநாயக்க அதனை ஒருபோதும் செய்யமாட்டார்.அவர்கள் நினைத்திருப்பது இந்த எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரத்தை தங்களுடைய கைகளுக்கு பெற்றுக்கொள்வதற்கு. அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாட்டுக்கு ஆதரவு என்று பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதனால் எந்த பலனும் இல்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எப்போதாவது சரி ராஜபக்சக்கள் வீட்டுக்கு செல்வார்கள். இருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் இன்னும் ஒரு அதிகாரத்தை பெற ஒரு பைத்தியக்காரன் வருவான். அந்த நிலையை தடுக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அந்த பொறுப்பு உள்ளது. உண்மையில் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்த வெளியேறி எதிர்க்கட்சியின் போராட்டத்தை மும்முனை போராட்டமாக மாற்றியமைக்க முன்வர வேண்டும்.ஒன்றுக்கொன்று சமனான மும்முனை போராட்டம் எதிர்க்கட்சியில் இருப்பது சிறப்பானதாக அமையும்.அது வெற்றியுடன் ஒரு பொது வேலைத் திட்டமொன்றிற்கு வர ஏதுவாக அமையும். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் இந்த அரசியலில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அந்த சந்தர்ப்பத்தை கைவிட்டு விட்டு செல்லுமாயின் அது வரலாற்று ரீதியான அரசியல் தவறாக அமையக்கூடும். இறுதியாக ரட்டே ரால குறிப்பிட வேண்டியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கு அந்த ஞானம் கீழே இருக்க வேண்டும் என்பதே.

அவ்வாறாயின் போய் வருகின்றேன்
கடவுள் துணை வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி